For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியில் இன்னொரு தமிழன்.. வாஷிங்டன் சுந்தரின் வாவ் பயணம்!

இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் தொடர் அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்து இருக்கிறார்.

By Shyamsundar

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் பிளேயர்கள் மிகவும் திறமையாக் விளையாடி வருகின்றனர். தற்போது இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் தொடர் அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்து இருக்கிறார்.

இவர் இந்திய அணியில் தேர்வானது மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும். பல சிரமங்களால் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்த வாஷிங்டன் சுந்தர் திறமையாக அனைத்தையும் உடைத்துக் கொண்டு இந்திய அணியில் சேர்ந்து உள்ளார்.

இவருக்கு கிரிக்கெட் உலகில் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இவர் தனது வாழ்க்கை பயணம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கஷ்டப்பட்டேன்

கஷ்டப்பட்டேன்

இந்திய அணியில் இணைந்து இருக்கும் வாஷிங்டன் சுந்தர் சில நாட்களுக்கு முன்பு வரை சரியான பார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். பிசிசிஐ அறிவித்த தமிழ்நாடு டி-20 அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். மொத்தமாக வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்து கஷ்டப்பட்டு இருக்கிறார். மேலும் அவருடைய தந்தை சுந்தர் அவருக்கு கிரிக்கெட் குறித்து நிறைய அறிவுரைகள் கூறி இருக்கிறார்.

அண்டர் 19ல் இல்லை

இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட அண்டர் 19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெறவில்லை. இதையடுத்து பலரும் அவருக்கு ஏன் வாய்ப்பு இல்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். அவர் இன்னும் 19 வயதை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் முயற்சி

கடும் முயற்சி

கிரிக்கெட்டில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வீட்டில் இருந்த நாட்கள்தான் தன்னை மாற்றியதாக வாஷிங்டன் சுந்தர் கூறியிருக்கிறார். அதன்படி தினமும் தன்னுடைய பவுலிங் பயிற்சியாளரும், தன்னுடைய அப்பாவும் தனக்கு கூறும் அறிவுரைகளை மிகவும் கவனமாக பின்பற்றி வந்ததாக தெரிவித்து இருக்கிறார். அவரின் விடா முயற்சி காரணமாக அண்டர் 19 போட்டிக்கு பதிலாக நேரடியாக இந்திய அணியிலேயே இடம்பிடித்து இருக்கிறார்.

சாதனை என்ன

சாதனை என்ன

இவர் முதல்தர போட்டிகளில் மிகவும் குறைவாகவே விளையாடி இருக்கிறார். முதலில் பேட்ஸ்மேனாக இருந்த இவர் பின் பவுலாராக மாற்றப்பட்டார். இப்போது சிறந்த ஆல்ரவுண்டராக உருவாக்கியுள்ளார். அதேபோல் ஐபிஎல்லில் புனே அணிக்காக விளையாடியது இவருக்கு நிறைய அனுபவங்களை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய அணிக்கு தமிழ்நாடு கொடுக்கும் அடுத்த பவுலிங் முத்து வாஷிங்டன் சுந்தர்.

திட்டம் என்ன

திட்டம் என்ன

ஒருநாள் போட்டிகளில் கோஹ்லியின் இடத்தில் விளையாட போகும் நபர் வாஷிங்டன் சுந்தர் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர் பெரும்பாலும் கோஹ்லி இல்லாத காரணத்தால் மூன்றாவது இடத்தில் களம் இறக்கப்படுவார். அதேபோல் இவரை எதிர்காலத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமித்து சில பயிற்சிகளை அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இணையத்தில் வாழ்த்து மழை

தற்போது இவர் இந்திய அணியில் இணைந்து இருப்பதால் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. இவர் ''வாஷிங்டன் சுந்தருக்கு இது மிகப்பெரிய திருப்பம். தமிழ்நாட்டிற்கு இது இன்னுமொரு பெரிய விஷயம். கண்டிப்பாக அவர் நன்றாக இதை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்பலாம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Tuesday, December 5, 2017, 13:56 [IST]
Other articles published on Dec 5, 2017
English summary
Tamilnadu players Washington Sundar selected for Indian team against Sri Lanka one day serious.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X