வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்.. தமிழக வீரர்கள் மட்டுமல்ல தமிழும் விளையாடுகிறது!

Posted By:
இந்திய அணியில் தமிழக வீரர்கள் மட்டும் அல்ல தமிழும் விளையாடுகிறது- வீடியோ

கொழும்பு: இலங்கை சென்று இருக்கும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள். முக்கியமாக அவர்களின் தமிழ் உரையாடல்கள் டாப் டிரெண்ட் ஆகி இருக்கிறது.

இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.

இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

மூன்று தமிழ் வீரர்கள்

தற்போது விளையாடும் இந்திய அணியில் மூன்று தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இருக்கிறார்கள். அதேபோல் கே எல் ராகுல் சென்னையில் வளர்ந்த காரணத்தால் அவருக்கும் தமிழ் தெரியும்.

தினேஷ்

இதில் தினேஷ் கார்த்திக் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று கூறலாம். இதுவரை கீப்பிங்கில் எந்த விதமான சொதப்பலும் செய்யவில்லை. அடுத்தபடியாக இந்திய அணிக்கு முக்கியமான நேரங்களில் பேட்டிங்கில் கை கொடுக்கிறார்.

விஜய் சங்கர்

இந்த தொடரில் அதிகம் பாராட்டப்பட வேண்டியது விஜய் சங்கர்தான். இந்திய அணிக்கு தமிழகம் கொடுத்து இருக்கும் சிறந்த வீரர் இவர்தான் என்று கண்டிப்பாக எதிர்காலம் சொல்லும். டி-20 போட்டியில் ஒரு ஓவருக்கு 5-7 ரன்கள் வரை மட்டுமே இவர் கொடுக்கிறார். பவுண்டரி, சிக்ஸர் கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசுகிறார். டி-20ல் இந்திய அணிக்கு இப்படி ஒரு வீரர் இதுவரை கிடைக்கவில்லை.

வாவ் வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர் நேற்றைய போட்டியில் எடுத்த மூன்று விக்கெட்தான் ஆட்டத்தையே மாற்றியது. அவர் போட்ட ஒவ்வொரு ஓவரிlலும் ஒரு விக்கெட் என முதல் மூன்று ஓவரிலேயே மூன்று விக்கெட் எடுத்துவிட்டார். அஸ்வினின் இடத்தை நிரப்ப இன்னொரு தமிழரும் தயாராகிவிட்டார்.

ஜோடி

இந்த மூன்று பேர் ஜோடி தற்போது இந்திய அணிக்கு நன்றாக உதவுகிறது. சென்னையில் மெரினாவில் விளையாடுவது போல ஜாலியாக விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக் சீனியர் என்பதால் எல்லோரையும் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்.

தமிழ் தமிழ்

அதேபோல் இவர்கள் மூன்று பேரும் களத்தில் தமிழில் மட்டுமே பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் தமிழில் பேசும் உரையாடல்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமயங்களில் இவர்கள் தமிழில் திட்டிக் கொள்வதும் வைரலாகி இருக்கிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Tamilnadu players are contributing very well in India T-20 squad.
Story first published: Thursday, March 15, 2018, 13:47 [IST]
Other articles published on Mar 15, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற