For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறுபடியும் செத்துப் போச்சு இந்திய அணி... 5வது போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

வெல்லிங்டன் நியூசிலாந்து அணியிடம் மீண்டும் ஒருமுறை தோல்வியுற்று விட்டது இந்தியா. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு போட்டி மட்டும் 'டை' ஆனது. மற்ற நான்கு போட்டிகளிலும் இந்தியா 'டை' ஆகி விட்டது.

கிரிக்கெட்டாப்பா விளையாடுறீங்க என்று எல்கேஜி குழந்தை கூட கிண்டலடிக்கும் அளவுக்கு ஆகி விட்டது இந்திய அணி, நியூசிலாந்துடன் ஆடிய ஆட்டங்களைப் பார்க்கும்போது. அப்படி ஒரு மோசமான தோல்வி இது.

வெல்லிங்டனில் கடைசிப் போட்டி

வெல்லிங்டனில் கடைசிப் போட்டி

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்தது.

டெய்லர் போட்ட அபார சதம்

டெய்லர் போட்ட அபார சதம்

இப்போட்டியில் நியூசாலிந்து அணியின் கேப்டன் ராஸ் டெய்லர் அபார சதம் போட்டு அணியை நிமிர வைத்து விட்டார். அவர் அபாரமாக ஆடி 102 ரன்களைக் குவித்தார்.

அடித்து நொறுக்கிய நியூசிலாந்து பேட்டிங்

அடித்து நொறுக்கிய நியூசிலாந்து பேட்டிங்

டெய்லர் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நியூசிலாந்து அணியும் பேட்டிங்கில் பின்னி எடுத்து விட்டது. குறிப்பாக வில்லியம்சன், டெய்லர் மற்றும் கடைசி நிலை வீரர் நீஷாம் ஆகியோர் பிரமாதமாக ஆடி விட்டனர்.

புயல் வேக நீஷாம்

புயல் வேக நீஷாம்

நீஷாம் கடைசி நேரத்தில் அடி நொறுக்கி விட்டார். வெறும் 19 பந்துகளைச் சந்தித்த அவர் 34 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சற்றும் எடுபடாத இந்தியப் பந்து வீச்சு

சற்றும் எடுபடாத இந்தியப் பந்து வீச்சு

இந்திய அணியின் பந்து வீச்சு சற்றும் எடுபடவில்லை. ஆரம்பத்தில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்குப் பந்து வீசினர். ஆனால் பின்னர் சொங்கி போல பவுலிங் செய்தனர்.

50 ஓவர்களில் 5 மட்டும் போய் 303 ரன்கள்

50 ஓவர்களில் 5 மட்டும் போய் 303 ரன்கள்

இறுதியில் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து 303 ரன்களை எடுத்தது நியூசிலாந்து.

வருண் ஆரோன் பரவாயில்லை

வருண் ஆரோன் பரவாயில்லை

இந்திய அணியின் வருண் ஆரோன் பந்து வீச்சில்தான் சற்று விக்கெட் விழுந்தது. 10 ஓவர் போட்டார், 60 ரன்களைக் கொடுத்தார். 2 விக்கெட்களை எடுத்தார். ரன்தான் ஜாஸ்தி கொடுத்து விட்டார்.

அஸ்வினுக்கு என்னாச்சு..

அஸ்வினுக்கு என்னாச்சு..

அஸ்வின் மீண்டும் சொதப்பினார். 6 ஓவர்கள் வீசிய அவர் 37 ரன்களைக் கொடுத்து விட்டு ஓய்ந்தார். விக்கெட் கிடைக்கவில்லை.

கோஹ்லி, டோணி ஓகே.. புவனேஷ் பரவாயில்லை

கோஹ்லி, டோணி ஓகே.. புவனேஷ் பரவாயில்லை

இந்தியத் தரப்பு பேட்டிங் செய்ய வந்தபோது விராத் கோஹ்லி, கேப்டன் டோணி, கடைசி வரிசையில் புவனேஷ் குமார்தான் சொல்லிக் கொள்ளும்படி ஆடினர். கோஹ்லி பொறுப்பாக ஆடி 82 ரன்களைக் குவித்தார். டோணி கட்டையைப் போட்டு 47 ரன்களைச் சேர்த்தார்.

மத்தவங்க வேஸ்ட்

மத்தவங்க வேஸ்ட்

மற்ற வீரர்கள் பொறுப்பாகவே ஆடவில்லை. ரோஹித் சர்மா, தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் சிங்கிள் டிஜிட்டில் வெளியேறினர். ராயுடு 40 பந்துகளைச் சந்தித்து 20 ரன்களை மட்டுமே எடுத்துக் கொடுத்தார். ரஹானே ஏமாற்றமளித்தார். அவரது பங்கு 2 ரன்கள்தான்.

'உஸ்'..ஸென்று போன 'யாரும் பீதியடையாதீங்க' புகழ் ஜடேஜா

'உஸ்'..ஸென்று போன 'யாரும் பீதியடையாதீங்க' புகழ் ஜடேஜா

யாரும் பீதி அடையத் தேவையில்லை. தைரியமாக விளையாடுவோம் என்று நேற்று படு தெம்பாகவும், ஆறுதலாகவும் பேசிய ரவீந்திர ஜடேஜாதான் இன்று பெரிதாக சொதப்பினார். பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய அவர் பேட்டிங்கிலும்

50 ஓவர் கூட ஆட முடியலைப்பா 5 ரன்களோடு சுணங்கிப் போய் விட்டார்.. இவர்தான் பெரும் பீதியுடன் விளையாடியது போலத் தெரிகிறது. இறுதியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆக மொத்தம்.. முட்டை....

ஆக மொத்தம்.. முட்டை....

ஆக, 5 போட்டிகளில் 4 ல் தோற்று ஒன்றை டை செய்து, தொடரையும் இழந்தது இந்தியா.

Story first published: Friday, January 31, 2014, 16:11 [IST]
Other articles published on Jan 31, 2014
English summary
A listless Indian cricket team slumped to its worst ODI series defeat in New Zealand, going down 0-4, after the Black Caps hammered them by 87 runs in the inconsequential fifth and final one-dayer here today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X