"டான்" பேட்டைப் பிடித்தது பாக்கியம்.. சச்சின் நெகிழ்ச்சி!

By Sutha

மும்பை: பிராட்மேன் பயன்படுத்திய பேட்டை நான் தொட்டுப் பார்க்க, பிடித்துப் பார்க்க கிடைத்த வாய்ப்பை நான் மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்

மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் சச்சின் கலந்து கொண்டு பேசினார். அப்போது இதை நினைவு கூர்ந்து பேசினார். ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சச்சின் பேச்சிலிருந்து....

பிராட்மேன் போட்டோ

பிராட்மேன் போட்டோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டொனால்ட் பிராட்மேன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த டெஸ்ட் அணி குறித்த புகைப்படம் என்னிடம் பத்திரமாக உள்ளது. அந்தப் படத்தை நான் பிரேம் போட்டு வீட்டில் மாட்டியுள்ளேன்.

பொக்கிஷம்

பொக்கிஷம்

அது எனக்கு பொக்கிஷம். காரணம். அந்த அணியில் நானும் இடம் பெற்றுள்ளேன் என்பதால். அதை விட முக்கியமானது அதைத் தேர்வு செய்தவர் பிராட்மேன் என்பதால்.

சர் டான்.. !

சர் டான்.. !

சர் டான் என்னைப் பாராட்டியதை எனது வாழ்க்கையின் மிகப் பெரிய, மிக முக்கியமான வாழ்த்தாக, பாராட்டாக கருதுகிறேன். சந்தேகத்திற்கிடமில்லாமல் அதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.

அப்பவே சொல்லிட்டாரே!

அப்பவே சொல்லிட்டாரே!

1994-95 கிரிக்கெட் தொடரின்போது எனது மனைவியிடம் பிராட்மேன் கூறினார்... சச்சின் என்னைப் போலவே ஆடுகிறார் என்று. அது மிகப் பெரிய கெளரவம், வாழ்த்து.

மறக்க முடியாத தருணம்

மறக்க முடியாத தருணம்

அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாத ஒன்று.

டான் பேட்டைப் பிடித்தபோது

டான் பேட்டைப் பிடித்தபோது

2007ம் ஆண்டில் நான் சிட்னியில் நடந்த போட்டியில் ஆடினேன். அப்போது டான் பிராட்மேனின் பேட்டை நான் தொடும் பாக்கியம் கிடைத்தது. கையில் கிளவுஸ் எல்லாம் அணிந்து கொண்டு மிகவும் பயந்து கொண்டு, புல்லரிப்போடு அந்த பேட்டைப் பிடித்தேன். தூக்கிப் பிடித்தேன்.

ஆச்சரியம்..

ஆச்சரியம்..

30-40 வருடங்களுக்கு முன்பு அவரது ஆட்டோகிராப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்ட எனக்கு பிராட்மேன் பயன்படுத்திய பேட்டையே பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் என்றார் சச்சின்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Cricket icon Sachin Tendulkar today said that he has the photograph of the all-time Test playing XI, picked by Australian great Donald Bradman, framed at his home and he would always "treasure" it as the legend had included him in that team. "Coming back to the greatest compliment that I have received in my life was without any doubt was from Sir Don," Tendulkar said while speaking at a sporting event organised by the Australian consulate in the presence of touring Australia Prime Minister Tony Abbot at the Cricket Club of India.
Story first published: Friday, September 5, 2014, 11:35 [IST]
Other articles published on Sep 5, 2014
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more