For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போதைக்கு சச்சின் ஓய்வெடுப்பார் என்று நினைக்கவில்லை-கேரி கிர்ஸ்டன்

மும்பை: சச்சின் டெண்டுல்கர் ஒரு அபாரமான ஆட்டக்காரர். அவர் இப்போதைக்கு ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் சில ஆண்டுகள் அவரால் கிரிக்கெட் ஆட முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

Sachin Tendulkar and Gary Kirsten

மீண்டும் சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. ஆனால் இப்போதைய மகிழ்ச்சியை மட்டுமே நான் கொண்டாடி வருகிறேன். கடந்த காலம் குறித்தோ அல்லது எதிர்காலம் குறித்தோ நான் சிந்திக்கவில்லை என்று சச்சின் கூறியுள்ளார்.

இந்தநிலையில் சச்சின் குறித்து கேரி கிர்ஸ்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், டெண்டுல்கர் இத்துடன் ஓய்வு பெற்று விடுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு அருமையான வீரர். இளம் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த முன்னோடி. கடந்த 3, 4 வருடங்களாக மிகச் சிறப்பாக அவர் ஆடி வருகிறார். கிரி்ககெட்டை மிகவும் நேசிக்கிறார் சச்சின். அவர் இப்போதைக்கு ஓய்வு பெறுவார் என்று நான் கருதவில்லை. இன்னும் சில ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை அவரிடம் இருப்பதாகவே கருதுகிறேன் என்றார் கிர்ஸ்டன்.

கிர்ஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்றவுடன் இரண்டு இலக்குகளை நிர்ணயித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதலிடம் பிடிக்க வைப்பது, உலகக் கோப்பையை வெல்வது. தற்போது இரண்டையும் கிர்ஸ்டன் நிறைவேற்றி விட்டார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், இதற்கு நான் காரணமில்லை. முழுக்க முழுக்க வீரர்கள்தான் காரணம். போட்டியின்போது ஏற்படும் நெருக்குதல்கள், கட்டாயங்கள், தேவைகளை சந்திப்பவர்கள் அவர்கள்தான். அதை சந்திக்க அவர்கள் தயாராக இருந்ததால்தான் வெற்றிகள் கிடைத்தன. அணியின் முழுப் பெருமைக்கும் அவர்கள்தான் காரணம் என்கிறார் அடக்கத்துடன்.

உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு படங்கள்

Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
Gary Kirsten, for whom the World Cup final was his last game as coach of India, also said he didn't think Tendulkar would stop here. "Sachin is the greatest sporting role model I've met in my life," Kirsten said. "He's had an incredible last three or four years, and he's enjoying his cricket even more. I don't think he is going to stop." Tendulkar has had to wait till his sixth World Cup campaign to win the trophy, and when asked whether this was the final accolade he needed to complete his closet-full of achievements, he said it was in fact the first thing he wanted to achieve.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X