அவரோட அந்த அட்வைஸ்... என்னோட வாழ்க்கையையே மாத்திடுச்சு... பாபர் அசாம் நெகிழ்ச்சி!

கராச்சி : சர்வதேச அளவில் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுபவர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.

ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இவர் தற்போது முதலிடத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிய ஒரு அட்வைஸ் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அடுத்த விராட் கோலி

அடுத்த விராட் கோலி

சர்வதேச ஐசிசி ஒருநாள் போட்டிகளில் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம். அவர் அடுத்த விராட் கோலி என்று எப்போதும் குறிப்பிடப்படுபவர். ஆனால் தான் போக வேண்டிய தூரம் அதிகம் என்றும் விராட்டுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் எப்போதும் கூறுவார்.

சதமடித்து சாதனை

சதமடித்து சாதனை

இந்நிலையில் ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளார் பாபர் அசாம். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 103 ரன்களை அடித்து இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

சிறப்பாக மாற்றிய ஆலோசனை

சிறப்பாக மாற்றிய ஆலோசனை

இந்நிலையில் விராட் கோலியின் ஒரு ஆலோசனை தன்னுடைய கிரிக்கெட் கேரியரை சிறப்பாக மாற்றியுள்ளதாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்ததையடுத்து சக வீரர் இமாம் -உல் ஹக்குடன் அவர் ற்கொண்ட விவாதத்தை பிசிபி வீடியோவாக வெளியிட்டுள்ளது.

கேரியரை மாற்றிய ஆலோசனை

கேரியரை மாற்றிய ஆலோசனை

இந்த வீடியோவில் பேசிய பாபர் அசாம், எல்லா வீரர்களை போலவே தானும் ஆடிக் கொண்டிருந்ததாகவும் ஆனால் விராட் கோலியுடன் தான் மேற்கொண்ட ஆலோசனையை அடுத்து தன்னுடைய கிரிக்கெட் கேரியர் முற்றிலும் மாறியதாகவும் அவர் தொவித்துள்ளார்.

விராட்டின் ஆலோசனை

விராட்டின் ஆலோசனை

மைதானத்தில் விளையாடும் அதே தீவிரத்துடன் நெட் பயிற்சிகளின்போது விளையாட வேண்டும் என்று விராட் கோலி தனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அதை தான் மிகவும் தீவிரமாக செய்து வருவதாகவும் ஒருநாள் நெட் பயிற்சியில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அந்த நாள் தனக்கு சிறப்பாக இல்லாததை போன்ற உணர்வு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Babar has said that he looks up to Kohli and has a lot more to achieve
Story first published: Wednesday, April 14, 2021, 20:11 [IST]
Other articles published on Apr 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X