உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்… கரெக்ட்…! அவரு இல்லாமலா?

லண்டன்:கிரிக்கெட் உலகில், தலை சிறந்த ஆல் ரவுண்டர்கள், தலை சிறந்த கேப்டன்கள் என்று வரிசைப்படுத்திய காலம் இருந்தது. அந்த வரிசையில் தலை சிறந்த விக்கெட் கீப்பர்கள் என்று ஒரு பட்டியல் ரசிகர்கள் முன் வைக்கப் படுகிறது. அந்த பட்டியலில் தல தோனியும் இடம்பிடித்திருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர்.. உலக கோப்பை கிரிக்கெட். ஒரு அணி வெற்றி பெற பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் போல விக்கெட் கீப்பரின் பங்களிப்பும் ரொம்ப முக்கியம். பேட்ஸ்மென்களின் கவனக் குறைவு தான் விக்கெட் கீப்பர்களின் மூலதனம்.

கொஞ்சம் அசால்ட்டாக விட்டாலும் அதற்காக பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும். அப்படியும் உலக கோப்பை தொடரில் சில ஆட்டங்கள் இருக்கின்றன. அவ்வாறு உலக கோப்பை தொடரில் சிறந்து விளங்கிய விக்கெட் கீப்பர்களைப் பற்றி நாம் பார்ப்போம்.

யாரை ரொம்ப பிடிக்கும்?.. திடீர்னு நடிகர் சூர்யாகிட்ட கேள்வி கேட்ட ரெய்னா.. பதில் என்ன தெரியுமா?

சங்கக்காரா தி பெஸ்ட்

சங்கக்காரா தி பெஸ்ட்

பெஸ்ட் விக்கெட் கீப்பர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின் ஜாம்பவனான, குமார் சங்கக்காரா. ஒரு காலகட்டத்தில் இலங்கை அணி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த அணியாக திகழ இவர் தான் முக்கிய காரணம்.

37 உலக கோப்பை போட்டிகள்

37 உலக கோப்பை போட்டிகள்

பல சாதனைகளை படைத்து, இலங்கைக்கு பெருமை சேர்த்தவர். இவர் பேட்டிங்கில் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக விளையாட கூடியவர். உலக கோப்பை தொடரில் மொத்தம் 37 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 41 கேட்ச் மற்றும் 13 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

ஜென்டில்மேன் கில்கிறிஸ்ட்

ஜென்டில்மேன் கில்கிறிஸ்ட்

சிறந்த விக்கெட் கீப்பர்களுக்கான பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் களத்தில் இருக்கும் வரை அதிரடிக்கு பஞ்சம் இருக்காது.

ஜென்டில்மேன் வீரர்

ஜென்டில்மேன் வீரர்

நேர்மையான ஆட்டக்காரர்.. களத்தில் அவுட் என்றால் அம்பயரின் முடிவுக்காக காத்திராமல் பெவிலியன் திரும்புவர். அதனால் கிரிக்கெட் உலகில் ஜென்டில் மேன் கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படுவர்.

45 கேட்ச், 7 ஸ்டம்பிங்

45 கேட்ச், 7 ஸ்டம்பிங்

ஒரு காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நம்பர் 1 அணியாக விளங்கியதற்கு முக்கிய காரணம் அவரது பேட்டிங் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பிங். உலக கோப்பை தொடரில் மொத்தம் 31 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 45 கேட்ச் மற்றும் 7 ஸ்டம்பிங் இவரது கணக்கில் இருக்கிறது.

களத்தில் இருக்கும் தல

களத்தில் இருக்கும் தல

பட்டியலில் 3வது இடம் சாட்சாத் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. சங்கக்காரா, கில்கிறிஸ்ட் தங்களது ஓய்வை அறிவித்து விட்டனர். எனவே தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்றால், அது தோனி தான். மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யக்கூடியதில் வல்லவர் என்பதால் அவரை விட்டால் இப்போதைக்கு விக்கெட் கீப்பிங்கில் ஆள் இல்லை.

தனி ஒருவராக தல

தனி ஒருவராக தல

உலக அளவில் தனி ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் ஒரே நபர் தல தோனி தான். பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடக் கூடியவர். இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழ்நிலைகளில், தனி ஒருவராக களத்தில் நின்று வெற்றியை தந்தவர். உலக கோப்பை தொடரில் மொத்தம் 20 போட்டிகளில் விளையாடி, அதில் 27 கேட்ச் மற்றும் 5 ஸ்டம்பிங்களை செய்திருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The best wicket keepers in all world cup cricket series.
Story first published: Tuesday, May 21, 2019, 15:11 [IST]
Other articles published on May 21, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X