முத்தரப்பு தொடரின் த்ரில் இறுதி போட்டி.. வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

Posted By:
வங்கதேசத்துக்கு எதிரா இறுதி போட்டியில் இந்தியா பந்து வீச்சு | Ind vs Ban

கொழும்பு: இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் இறுதி டி-20 போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வந்தது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடந்தது.

இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடந்தது.

ஏன் இந்த தொடர்

ஏன் இந்த தொடர்

இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடருக்காக இலங்கை அணி கடந்த ஒரு மாதமாக பயிற்சி எடுத்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

முதல் போட்டியில் இந்தியா இலங்கையிடம் தோற்றது. அதன் பின் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. அதன்பின் மீண்டும் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

அசத்தல்

அசத்தல்

வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அனைத்து போட்டியிலும் வரிசையாக வென்றது. இதனால் தற்போது இறுதி போட்டிக்கு அந்த அணியும் தகுதி பெற்றுள்ளது.

இலங்கை மோசம்

இலங்கை மோசம்

இலங்கை இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால் அதன்பின் நடந்த எந்த போட்டியிலும் வெற்றிபெறவில்லை. சொந்த மண்ணில் நடக்கும் அந்நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போய் இருக்கிறது.

 இன்று இறுதி போட்டி

இன்று இறுதி போட்டி

இந்த நிலையில் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் இறுதி டி-20 போட்டி இன்று நடந்தது. இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பு இல்லை. மாலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

 வங்கதேசம் பேட்டிங்

வங்கதேசம் பேட்டிங்

முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேசம் ஆரம்பத்திலேயே சொதப்பியது. ஆனால் கடைசி நேரத்தில் சுதாரித்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்தது. சாஹல் அதிகமாக 3 விக்கெட் எடுத்தார்.

 இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

அதன்பின் களமிறங்கிய இந்தியாவின் தொடக்கம் மோசமாக இருந்தது. ரோஹித் 56 ரன் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா ரன்கள் 167 எடுத்து த்ரில் வெற்றி அடைந்தது. இதனால் முத்தரப்பு தொடரில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
The final T-20 match between India and Bangladesh in Sri Lanka.
Story first published: Sunday, March 18, 2018, 18:01 [IST]
Other articles published on Mar 18, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற