நியூசி.க்கு எதிரான டி-20 தொடரின் இந்திய அணி அறிவிப்பு... யார் இன்... யார் அவுட் ?

Posted By:

டெல்லி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடாததால் அணியில் சிறுசிறு மாற்றங்கள் செய்யபட்டுள்ளன.

நியூசிலாந்துக்கு எதிராக டி- 20 தொடரின் இந்திய அணி பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. புதிதாக அணியில் சேரும், அணியைவிட்டு வெளியேறும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த அணிக்கும் கோஹ்லியை கேப்டனாக செய்லபடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

 நியூசிலாந்துக்கு எதிரான தொடர்

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. நேற்று முதல் நவம்பர் 7-ந் தேதி மூன்றாவது டி-20 போட்டி வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல கொண்டாட்டங்கள் காத்திருக்கிறது. மேலும் இந்த போட்டியின் டி-20 தொடர் நவம்பர் 1ம் தேதி தொடங்க இருக்கிறது.

 நியூசிலாந்து அணி முன்னிலை

நியூசிலாந்து அணி முன்னிலை

நேற்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு, இந்தியாவுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி நிர்ணயித்த 281 ரன் இலக்கை நியூசிலாந்து அணி மிக எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நியூசிலாந்து அணியின் இந்த வெற்றியால் டி-20 போட்டியின் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அணியில் ஷ்ரேயஸ் ஐயர் , முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் நெஹ்ரா அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியின் விளையாடும் வீரர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரோஹித், தவான், கோஹ்லி, தினேஷ் கார்த்திக் , மனிஷ் பாண்டே, கே எல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், , டோணி, பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமது சிராஜ் , சாஹல், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெறுவர்.

 நெஹ்ராவின் கடைசி ஆட்டம்

நெஹ்ராவின் கடைசி ஆட்டம்

இந்த நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியே இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ராவின் கடைசி ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் இருந்து அவர் அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார். மேலும் இந்த போட்டி அவரது சொந்த ஊரில் நடக்கிறது என்பது முக்கியமான விஷயம் ஆகும்.

Story first published: Monday, October 23, 2017, 13:06 [IST]
Other articles published on Oct 23, 2017
Please Wait while comments are loading...