For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம இடத்துக்கு 3 - 4 வீரர்கள் வெயிட்டிங்.. ஒழுங்கா ஆடலைனா இடம் காலி.. இந்திய ஸ்பின்னர் ஓபன் டாக்!

டெல்லி : நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால், நம்முடைய இடத்தை நிரப்ப 3 முதல் 4 ஆட்டக்காரர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள் என்று இந்திய ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை தரத்தவறிய சஹால், சமீபத்தில் வங்கதேச அணிகளுக்கு எதிராக இந்திய அணி களம் கண்ட சர்வதேச டி20 தொடரில் சிறப்பாக விளையாடினார்.

இந்நிலையில் இந்திய அணிக்காக தேர்வு பெறுவது நமது கைகளில் இல்லை என்று தெரிவித்த அவர், குல்தீப்பையும் தன்னையும் இந்திய அணிக்காக விளையாட தேர்வாளர்கள் தேர்வு செய்தபோது, அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

 சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை

தனது சிறப்பான ஆட்டத்தை மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெளிப்படுத்த தவறிய சஹால், இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவதில் இருந்தும் தவறி வருகிறார்.

 சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

ஆனால் சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச டி20 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை தந்ததன் மூலம், மீண்டும் அதிரடி ஆட்டத்தில் சஹால் களமிறங்கி உள்ளார்.

 நமது கைகளில் இல்லை

நமது கைகளில் இல்லை

இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவது நமது கைகளில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அது தேர்வாளர்களின் கைகளில் உள்ளதாக தெரிவித்த அவர், எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தான் மற்றும் குல்தீப் அணிக்காக தேர்வான போது, அஸ்வின் மற்றும் ஜடேஜா அணியில் இடம்பெறாததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

 உள்ளூர் அணியில் ஆட்டம்

உள்ளூர் அணியில் ஆட்டம்

இந்திய அணியில் இடம்பெறாத தருணங்களில் சஹால் தன்னுடைய மாநிலத்திற்காக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். சமீபத்தில் பரோடாவில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்று விளையாடினார்.

 சஹால் கருத்து

சஹால் கருத்து

இந்திய அணிக்காக விளையாடினாலும் மாநிலத்தின் சார்பில் விளையாடினாலும் அதுகுறித்து கவலை கொள்ளாமல் தொடர்ந்து விளையாடுவதில் மட்டுமே முழுகவனத்தையும் செலுத்தி விளையாட வேண்டும என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 போட்டி அதிகம்

போட்டி அதிகம்

சமீப காலங்களில் இந்திய அணி மிகுந்த வளர்ச்சியை கண்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள சஹால், இதன்மூலம் வீரர்களுக்கு இடையில் சிறந்த போட்டி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 நமது இடத்தை நிரப்ப தயாராக உள்ள 3, 4 பேர்

நமது இடத்தை நிரப்ப தயாராக உள்ள 3, 4 பேர்

நாம் சரியாக விளையாடவில்லை என்றால் நமது இடத்தை நிரப்புவதற்கு நமக்கு பின்னால் 3 முதல் 4 வீரர்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, November 24, 2019, 19:36 [IST]
Other articles published on Nov 24, 2019
English summary
Chahal says It is important to Keep Playing whether it is for india or for state
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X