வெளிச்சம் இல்லையா எதுக்கும் கண்ணாடியை கழற்றி பாருங்க..!! நடுவரை கலாய்த்த சவுதி

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கி ஒரு மணி நேரம் வரை பனிமூட்டமாகவே காணப்பட்டது

இதனால், இரு அணி வீரர்களுமே சற்று தடுமாறினர்.இதே போன்று மாலையிலும் பனிப்பொழிவு மிக விரைவாகவே தொடங்கியது.

இளம் சிங்கம் அதிரடி.. இமாலய இலக்கை எட்ட இந்திய அணி தீவிரம்இளம் சிங்கம் அதிரடி.. இமாலய இலக்கை எட்ட இந்திய அணி தீவிரம்

இந்திய அணி 258 ரன்களக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோரை எட்டிய போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

பனிப்பொழிவு

பனிப்பொழிவு

மாலை 4 மணிக்கே பனிப்பொழிவு தொடங்கியதால், வெயில் வெளிச்சம் சுத்தமாக இல்லை.இதனால் உயர்மின் விளக்கு எரியுட்டப்பட்டது. அந்த வெளிச்சத்தில் சிவப்பு நிற பந்த தெரியாததால் மாலை 3.30 மணிக்கு மேல் நடுவர்கள் வெளிச்சம் சரியாக இருக்கிறதா என லைட் மீட்டர் கருவியை வைத்து சோதனை செய்தனர்

நடுவர்கள் அறிவுறுத்தல்

நடுவர்கள் அறிவுறுத்தல்

அப்போது, நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், வேகப்பந்துவீச்சாளர் ஜேமிசனை பந்துவீச அழைத்தார். அப்போது அதனை தடுத்த நடுவர்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற வெளிச்சம் இல்லை என்றும், சழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து, ஒரு சிறிய ஆலோசனைக்கு பிறகு சுழற்பந்துவீச்சாளரை பந்துவீச வில்லியம்சன் அழைத்தார்.

கிண்டல்

கிண்டல்

போதிய வெளிச்சம் இல்லாதது குறித்து நடுவர் நிதின் மேனன், நியூசிலாந்து வீரர் டிம் சவுதியிடம் கூறினார். அப்போது நடுவர் நிதின் மேனன் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார். இதனை பார்த்த சவுதி, எதுக்கும் கூலிங் கிளாஸை கழற்றி பாருங்கள், அப்போது வெளிச்சம் தெரியும் என கிண்டலாக கூறினார். உடனடியாக நடுவரும் கண்ணாடியை கழற்றிவிட்டு, இப்போதும் வெளிச்சமாக இல்லை என்று நகைச்சுவையாக கூறினார்.

84 ஓவர் மட்டும்..

84 ஓவர் மட்டும்..

இதன் பின்னர் சோமர்வெயில் சுழற்பந்துவீச, அதனை ஸ்ரேயா ஐயர் இறங்கி வந்து சிக்சர் அடித்தார். இதனை பார்த்த வில்லியம்சன், இது சரிப்பட்டு வராது என்று நினைத்து நடுவரிடம் ஏதோ கூற, முதல் நாள் ஆட்டத்தை முடித்து கொள்வோம் என நடுவர்கள் அறிவித்தனர். டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 90 ஓவர்களை வீச வேண்டும். ஆனால் நியூசிலாந்து அணி 84 ஓவர் மட்டுமே வீசியிருந்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Tim southee Trolls umpire for bad light decision. Umpire Netin Menon asks Williamson not to use Fast Bowlers.
Story first published: Thursday, November 25, 2021, 19:20 [IST]
Other articles published on Nov 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X