For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீ திட்டுவியா.. பதிலுக்கு நானும் திட்டுவேன்.. ஆஸி.க்கு ஸ்லெட்ஜிங்கில் பதிலடி கொடுத்த பாகிஸ்தான்!

By Veera Kumar

அடிலெய்டு: ஆஸ்திரேலிய பாணியிலேயே பாகிஸ்தான் பவுலரும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு, கடுப்பேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிலெய்டில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான காலிறுதி போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முன்னதாக, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறிக் கொண்டிருந்தது. பாக். வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் ஒருமுனையில் பேட் செய்தபோது, அவருக்கு பந்து வீச வந்தார் மிட்சேல் ஸ்டார்க்.

ஆப்-ஸ்டம்புக்கு வெளியே யார்க்கர் போல ஒரு பந்தை வீசினார். அது பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. உடனே, வகாப் ரியாசிடம் நெருங்கி சென்று, "இப்படித்தான் பந்தை எறிய வேண்டும், புரிகிறதா.." என்று பீட்டர் விட்டார். அதற்கு அடுத்த பந்தை எறியும்போதும், வகாப் ரியாசை பார்த்து சிரித்தார்.

இதையடுத்து நடுவரிடம் புகார் சொன்னார் வகார் ரியாஸ். அம்பயர், வாயில் கையை வைத்து அமைதி என்பது போல செய்கை செய்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா பேட் செய்ய வந்தபோது, வகாப் ரியாஸ் அனல் பறக்கும் பந்து வீச்சை காண்பித்தார். அதிலும், வாட்சனுக்கு எதிராக தொடர்ந்து பவுன்சர்களாக வீசி நிலைகுலைய வைத்தார். ஏற்கனவே அவரது பவுன்சரில் கேப்டன் மைக்கேல் கிளார்க் அவுட் ஆகியிருந்ததால், வாட்சனும், குனிந்தோ, வளைந்தோ பவுன்சர் பந்துகளை விட்டுக் கொண்டே இருந்தார்.

அப்போதெல்லாம், பேட்ஸ்மேன் அருகே ஓடிவந்து வகாப் ரியாஸ், கைதட்டி கேலி செய்தார். கிட்டத்தட்ட ஒரு ஓவர் முழுவதுமே இப்படியான சீண்டலை வகாப் தொடர்ந்தார். ஆனால், வாட்சன் திருதிருவென முழித்தாரே தவிர பதிலுக்கு எதையும் சொல்லவில்லை. ஒருவேளை, நம்மகிட்ட கத்துகிட்ட மொத்த வித்தையையும் இந்த பாக். பவுலர் இறக்குறாரே என்ற அதிர்ச்சியில் இருந்து வாட்சன் மீளவில்லை போலும்.

Story first published: Friday, March 20, 2015, 15:09 [IST]
Other articles published on Mar 20, 2015
English summary
Wahab Riaz is on fire in Adelaide & bowling serious HEAT! He sledging Watson time and time again.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X