For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழக வீரரை வித்தியாசமாக பயன்படுத்தும் இந்திய அணி.. டெல்லி டெஸ்டில் எஸ்எம்எஸ் சர்விஸ் செய்கிறார்!

இந்தியா மற்றும் இலங்கை மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

By Shyamsundar

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் கடைசி நாள் டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் ஷங்கர் என்ற வீரர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இவர் தற்போது இந்திய அணியில் வித்தியாசமாக பயன்படுத்தப்பட்டு வருகிறார். இதனால் அவர் தற்போது பலரால் பாராட்டப்பட்டும் வருகிறார்.

அதே சமயத்தில் அவரை தவறாக பயன்படுத்தும் இந்திய அணிக்கு எதிராகவும் நிறைய பேர் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.

தமிழக வீரர்

தமிழக வீரர்

இந்திய டெஸ்ட் அணியில் புதிதாக தமிழக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். விஜய் ஷங்கர் என்ற அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் இலங்கைக்கு எதிராக நடக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் ஒருமுறை கூட களத்தில் இறங்கவில்லை. சில சமயம் பீல்டிங் செய்ய மட்டும் களம் இறங்கினார்.

வித்தியாசமான வேலை

வித்தியாசமான வேலை

இந்த நிலையில் அவரை இந்திய கோச் மிகவும் வித்தியாசமான வேலை ஒன்றிற்காக பயன்படுத்தி இருக்கிறார். அதன்படி அவர் ரவி சாஸ்திரியிடம் இருந்து இந்திய கேப்டனுக்கு முக்கிய தகவல்களை அளித்து வருகிறார். ஒவ்வொரு ஓவர் முடியும் போதும் இவர் கோஹ்லியிடம் ரவி சாஸ்திரி கூறியதை சென்று சொல்கிறார். அதே போல பீல்டிங் இறங்கும் போது கோஹ்லிக்கு முக்கிய தகவல்கள் கூறுகிறார். இவர் கூறும் வரிசையிலேயே பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் எஸ்எம்எஸ் சர்விஸ்

இந்த நிலையில் விஜயின் இந்த செயலை பலர் பாராட்டி உள்ளனர். போட்டியில் இறங்கவில்லை என்றாலும் கவலை இல்லாமல் பெருந்தன்மையாக செயல்படுவதாக கூறியுள்ளனர். அதில் "விஜய் ஷங்கர் நல்ல சேவை செய்கிறார். எஸ்எம்எஸ் சர்விசுக்கு புதிதாக 'ஷங்கர் மெசேஜ் சர்விஸ்' என்று விளக்கம் கொடுக்கலாம்'' என்று கூறியுள்ளார்.

புரிந்து கொள்ள முடியவில்லை

இந்த நிலையில் இந்திய தேர்வு வாரியத்திற்கு எதிராகவும் சிலர் பேசியுள்ளனர். இவர் "இந்திய தேர்வு வாரியத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் வீரரை அணியில் எடுக்கிறார்கள், ஒருநாள் உட்கார வைக்கிறார்கள் . எதையும் புரிந்து கொள்ளவே முடியவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். சில சமயம் மட்டுமே பீல்டிங் இறங்கிய விஜய் ஷங்கரின் துடிப்பு இந்த போட்டியில் பல முறை பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 6, 2017, 14:02 [IST]
Other articles published on Dec 6, 2017
English summary
TN player Vijay Shankar worked as the messenger for India Team. He conveys important message from Ravi Shasthiri to Kohli in Delhi test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X