முரளி விஜயை வெறுப்பேற்றிய ரசிகர்கள்..தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து கிண்டல்..மைதானத்தில் நடந்தது என்ன?

சேலம்: டிஎன்பிஎல் லீக் கிரிக்கெட தொடரில் முரளி விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்கள் கிண்டல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் திருச்சி அணிக்காக ஃபில்டிங் செய்யும் போது தான் இந்த சம்பவம் நடந்தது.

அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் DK DK என்று கத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பார்வையாளர்களை பார்த்து அமைதியாக இருக்கும் படி முரளி விஜய் சைகையால் செய்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கை

முரளி விஜய்யும், தினேஷ் கார்த்திக்கும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு பெரியதாக கிடைக்காத நிலையில் முரளி விஜய் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக வலம் வந்தார். அப்போது, தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி நிக்கிதாக்கும், முரளி விஜய்க்கும் தொடர்பு ஏற்பட்டது.

முரளி விஜயுடன் திருமணம்

முரளி விஜயுடன் திருமணம்

இதனையடுத்து, கார்த்திக், நிக்கிதா ஜோடி பிரிந்தது. இதனைத் தொடர்ந்த முரளி விஜய்யும் நிக்கிதாவும் திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்ந்து வருகின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சரிவு, தினேண் கார்த்திக்கை புரைட்டி போட்டது. எனினும் அவர் மீண்டும் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபகா படிக்கலை திருமணம் செய்து கொண்டார்.

மீண்ட தினேஷ் கார்த்திக்

மீண்ட தினேஷ் கார்த்திக்

இதன் பிறகு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கார்த்திக், தற்போது 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு பிறகு இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியிலிருந்து ஒரங்கட்டப்பட்ட விஜய், தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.

முரளி விஜய் கோரிக்கை

முரளி விஜய் கோரிக்கை

இந்த நிலையில தான், தினேஷ் கார்த்திக்கின் ரசிகர்கள் முரளி விஜயை வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் தான் தமது தனிப்பட்ட வாழ்க்கையை கிரிக்கெட் மைதானத்துக்கு கொண்ட வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கைக் கூப்பி முரளி விஜய் கோரிக்கை வைத்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
TNPL 2022 – Fans chants Dinesh Karthik name in front of Murali vijay முரளி விஜயை வெறுப்பேற்றிய ரசிகர்கள்..தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து கிண்டல்..மைதானத்தில் நடந்தது என்ன?
Story first published: Tuesday, July 26, 2022, 17:43 [IST]
Other articles published on Jul 26, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X