For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது அஸ்வின் இல்லையா? பைனலில் கேப்டன் அஸ்வின் இல்லாமல் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ்! #TNPL2019

சென்னை : 2019 டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் ஆடவில்லை. அவர் இல்லாமல் ஜெகதீசனை கேப்டனாகக் கொண்டு களம் கண்டது திண்டுக்கல் அணி.

டிஎன்பிஎல் தொடரை தொடர்ந்து பார்க்காத பலரும், என்னது இறுதிப் போட்டியில் அஸ்வின் இல்லையா? ஏன் என்ன ஆச்சு? என கேட்டு வருகின்றனர்.

அஸ்வின் நிலை

அஸ்வின் நிலை

டிஎன்பிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. லீக் சுற்று முதல் அந்தப் போட்டி வரை ரவிச்சந்திரன் அஸ்வின் தான் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

எலிமினேட்டர் போட்டி வெற்றி

எலிமினேட்டர் போட்டி வெற்றி

எனினும், எலிமினேட்டர் போட்டி மற்றும் இறுதிப் போட்டியில் அஸ்வின் ஆடவில்லை. தங்கள் வழக்கமான கேப்டனை இழந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, நாராயண் ஜெகதீசனை கேப்டனாக கொண்டு எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்றது.

என்ன ஆனார்?

என்ன ஆனார்?

அடுத்து இறுதிப் போட்டியிலும் அஸ்வின் இல்லாமல் ஜெகதீசன் தலைமையில் களம் கண்டது திண்டுக்கல் அணி. அஸ்வின் என்ன ஆனார்? இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளது.

வெ.இண்டீஸ் சென்றார்

வெ.இண்டீஸ் சென்றார்

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அணியில் இடம் பெறாத அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். அதற்காக ஆகஸ்ட் 14 அன்று வெஸ்ட் இண்டீஸ் கிளம்பிச் சென்றார். அதனால், இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

அதனால் தான் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முக்கியமான இறுதிப் போட்டியில் அனுபவம் வாய்ந்த அஸ்வின் இல்லாமல் ஆடி வருகிறது. லீக் சுற்றில் தொடர் வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டன் இல்லாதாது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.

ஜெகதீசன் பார்ம்

ஜெகதீசன் பார்ம்

எனினும், அஸ்வின் இல்லாத நிலையில் கேப்டனாகி இருக்கும் ஜெகதீசன் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 79.6 என்ற அளவில் இருக்கிறது. மேலும், அஸ்வின் இல்லாமல் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று இருப்பதால் திண்டுக்கல் அணியின் அடிப்படை பலம் குறையாமல் தான் உள்ளது.

Story first published: Thursday, August 15, 2019, 21:19 [IST]
Other articles published on Aug 15, 2019
English summary
TNPL Final 2019 : Ashwin is not playing for Dindigul Dragons in TNPL final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X