For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது கோஹ்லி இல்ல போலி.. கோஹ்லியை அழைத்து வருவதாக கூறி மக்களை ஏமாற்றிய அரசியல்வாதி

தேர்தல் பிரச்சாரத்திற்கு விராட் கோஹ்லியை அழைத்து வருவதாக கூறிவிட்டு அவரைப்போலவே தோற்றம் கொண்ட வேறு நபரை அரசியல்வாதி ஒருவர் அழைத்து வந்து மக்களை ஏமாற்றியுள்ளார்.

By Shyamsundar

Recommended Video

இது கோஹ்லி இல்ல போலி..வீடியோ

புனே: தேர்தல் பிரச்சாரத்திற்கு விராட் கோஹ்லியை அழைத்து வருவதாக கூறிவிட்டு அவரைப்போலவே தோற்றம் கொண்ட வேறு நபரை அரசியல்வாதி ஒருவர் அழைத்து வந்து மக்களை ஏமாற்றியுள்ளார்.

புனே அருகே இருக்கும் சிறுர் என்ற நகரத்தில் உள்ள இராமலிங்க கிராம பஞ்சாயத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. அந்த பஞ்சாயத்து தொகுதியில் தேர்தலில் நின்ற விட்டல் கண்பாட் கவாத் என்ற சுயேச்சை வேட்பாளர் இந்த மோசடியை செய்துள்ளார்.

அவர் மக்களுக்கு வித்தியாசமான வாக்குறுதி ஒன்றை அளித்து இருக்கிறார். அதன்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை அழைத்து வருவதாக கூறி இருக்கிறார்.

ஊர் முழுக்க போஸ்டர்

ஊர் முழுக்க போஸ்டர்

இதோடு விடாமல் ஊர் முழுக்க விராட் கோஹ்லியுடன் அவர் இருப்பது போல போட்டோஷாப் செய்து, கட் அவுட் அடித்துள்ளார். நேற்று முதல் நாள் அவர் வருவார் என்று வாக்குறுதி அளித்து மக்கள் எல்லோரும் பிரச்சார நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தெரு தெருவாக இதற்காக அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.

தயாரான மக்கள்

தயாரான மக்கள்

மக்களும் இதற்கு தயாராக வந்துள்ளனர். சிலர் கோஹ்லியுடன் கொடுக்க வேண்டும் என்று பரிசுகள் கூட வாங்கி வந்துள்ளனர். இதனால் அவரது பிரச்சாரத்தை பார்க்க பக்கத்து ஊர் மக்களும் வந்துள்ளனர். ஆனால் அந்த வேட்பாளர் கோஹ்லியை இதற்கு முன்பு நேரில் பார்த்தது கூட இல்லை என்ற உண்மை அவர்களுக்கு தெரியாது.

செல்பி எடுத்தனர்

செல்பி எடுத்தனர்

இதனால் அந்த அரசியல்வாதி, கோஹ்லி போலவே தோற்றமளிக்கும் நபர் ஒருவரை அழைத்து வந்துள்ளார். அவர் பார்க்க அப்படியே கோஹ்லி போல முக வெட்டு, தாடி, முடி, உடல் அமைப்புடன் இருந்துள்ளார். இதனால் மக்கள் வேகமாக சென்று அவருடன் செல்பி எடுக்க சென்றுள்ளனர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால் பக்கத்தில் சென்ற பின்தான் அவர் கோஹ்லி இல்லை என்று தெரிந்துள்ளது. மேலும் மோசடியை கண்டுபிடித்த பின் கூட , அந்த அரசியல்வாதி, இதுதான் கோஹ்லி என்று சொல்லி மக்களிடம் சாதித்துள்ளார். கடைசியில் மக்கள் அந்த அரசியல்வாதியை திட்டிவிட்டு அந்த இடத்தைவிட்டு சென்றுள்ளனர்.

Story first published: Tuesday, May 29, 2018, 12:17 [IST]
Other articles published on May 29, 2018
English summary
Politicians can go to any extent to make poll promises. Here is the story of one such politicians who had promised the voters that he would bring Virat Kohli, the Indian cricket team captain as the chief guest.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X