For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

100 சதவீதம் அர்ப்பணிப்போடு ஆடுவதில்லை.. பேட்டிங் ரகசியத்தை வெளியே சொன்ன கோஹ்லி

By Veera Kumar

டெல்லி: தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதற்கான ரகசியத்தை விராட் கோஹ்லி வெளிப்படுத்தியுள்ளார். 100 சதவீதம் அர்பணிப்போடு ஆடுவதால்தான் சிறப்பாக ஆட முடிவதாக கோஹ்லி கூறியிருப்பார் என நினைத்திருந்தால் அது தவறு.

இந்தியாவில் பிரீமியர் பட்ஸல் லீக் என்ற உள்ளரங்க கால்பந்து தொடர் வரும் ஜூலை 15ம் தேதி தொடங்க உள்ளது. இதன் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.

இந்த விளையாட்டை பிரபலப்படுத்தம் வகையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஒரு பாடல் உருவாக இருக்கிறது. இந்த பாடலை பல பாடகர்கள் பாடவுள்ள நிலையில் அவர்களில் ஒருவராக விராட் கோஹ்யும் இந்த பாடலின் ராப் பகுதியை பாடவுள்ளார்.

ரசிகன்

ரசிகன்

இந்நிலையில் நிருபர்களுக்கு கோஹ்லி அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் நீண்ட காலமாக ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகனாகும். அவருடன் ஒரே திரையை பகிரும் வாய்ப்பு கிடைத்துள்ளதை பெருமையாக நினைக்கிறேன்.

ரிலாக்ஸ்

ரிலாக்ஸ்

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் நான் இடம்பெறவில்லை. சில நேரங்களில் விளையாட்டை விட்டு ஒதுங்கியிருந்து, ரிலாக்ஸ் செய்வதும் நன்றாகத்தான் இருக்கிறது. அதைத்தான் தற்போது அனுபவித்து வருகிறேன்.

பின்பு பார்க்கலாமே

பின்பு பார்க்கலாமே

இந்திய அணி 5 பவுலர்களை கொண்டு ஆட வேண்டுமா, நான்குபேரே போதுமா என்பது குறித்தெல்லாம் இப்போது நான் யோசிக்கவில்லை. மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகுதான் அதில் கவனம் செலுத்த உள்ளேன்.

120 சதவீதம்

120 சதவீதம்

நான் எப்போதுமே 120 சதவீதம் அர்ப்பணிப்போடுதான் கிரிக்கெட் ஆடுகிறேன். அதனால்தான் என்னால் தொடர்ச்சியாக சிறப்பாக பேட் செய்ய முடிகிறது. அதேநேரம், வெற்றி, தோல்வி எனது கையில் கிடையாது. நான் முழு அளவில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறேன். இவ்வாறு விராட் கோஹ்லி தெரிவித்தார்.

Story first published: Wednesday, June 8, 2016, 10:35 [IST]
Other articles published on Jun 8, 2016
English summary
Team India's run machine Virat Kohli, who has been in tremendous form in 2016, has revealed the reason for his enormous success.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X