For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே குற்றச்சாட்டு.. எனக்கு மட்டும் 3 ஆண்டு தடையா? கேள்வி கேட்கும் உமர் அக்மல்

கராச்சி : கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு கடந்த ஏப்ரலில் 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

Recommended Video

England's squad for 1st test vs Pakistan

இதை எதிர்த்து அக்மல் மேல்முறையீடு செய்த நிலையில், தற்போது இந்த தடை 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஒரே குற்றச்சாட்டுக்கு மற்ற வீரர்களுக்கு குறைவாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் மட்டும் மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அக்மல், தன்னுடைய தண்டனை மேலும் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மஹிக்காக நான் விக்கெட் கீப்பிங் செஞ்சிருக்கேன்... சில ஓவர்ஸ்தான்.. ஆனா பயமா இருந்துச்சு மஹிக்காக நான் விக்கெட் கீப்பிங் செஞ்சிருக்கேன்... சில ஓவர்ஸ்தான்.. ஆனா பயமா இருந்துச்சு

3 ஆண்டுகள் தடை

3 ஆண்டுகள் தடை

நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 2009ல் முதல் முறையாக விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், சிறப்பான வீரராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இதுகுறித்த விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஏப்ரலில் அவருக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அடுத்த ஆகஸ்ட்டில் விளையாடலாம்

அடுத்த ஆகஸ்ட்டில் விளையாடலாம்

இதை எதிர்த்து அக்மல் மேல்முறையீடு செய்த நிலையில், தற்போது அவரது தடைக்காலம் 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொண்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பாகிர் முகமது கொக்கார் தற்போது இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 20 முதலே அவரது தடை நடைமுறையில் உள்ள நிலையில், அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் அக்மல் விளையாட முடியும்.

உமர் அக்மல் அறிவிப்பு

உமர் அக்மல் அறிவிப்பு

இந்நிலையில், இந்த தீர்ப்பு தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், இதே குற்றச்சாட்டுக்கு குறைவான தண்டனைகளை சக வீரர்கள் பெற்ற நிலையில், தனக்கு மட்டும் அதிகப்படியான தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அக்மல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து, இதை மேலும் குறைக்க முறையீடு செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைமை பயிற்சியாளரிடம் வாக்குவாதம்

தலைமை பயிற்சியாளரிடம் வாக்குவாதம்

உமர் அக்மல் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக உள்ளார். கடந்த 2014ல் லாகூரில் டிராபிக் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2017ல் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 3 போட்டிகளில் தடை பெற்றிருந்தார்.

Story first published: Thursday, July 30, 2020, 9:01 [IST]
Other articles published on Jul 30, 2020
English summary
Umar Akmal's three-year ban from cricket was shortened to 18 months
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X