For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரசிகர்களை கட்டிப்போட்ட விரல் வித்தைக்காரர்.. அம்பயர் பில்லி பவுடன் கிரிக்கெட்டுக்கு குட்பை

By Veera Kumar

துபாய்: உடல் நலக்குறைவு காரணமாக ஐசிசியின் சர்வதேச நடுவர் பிரெண்ட் பெஸர் பில்லி புவுடன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியுள்ளார்.

நீங்கள் எந்த கிரிக்கெட் வீரருக்கு ரசிகர் என்று கேட்டால், சச்சினை கை காட்டுவீர்கள், கோஹ்லி, டிவில்லியர்ஸ் என்பீர்கள், மிட்சேல் ஸ்டார்க் பிடிக்கும் என்பவரும் உண்டு.

ஆனால் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் அம்பயரை பிடிக்கும் என சொல்ல மாட்டார்கள். காரணம், தங்கள் அபிமான வீரருக்கு என்றாவது ஒருநாள் அவர் அவுட் கொடுத்திருப்பார் என்பதால்தான்.

அழகு அவுட்

அழகு அவுட்

இப்படி எத்தனை விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், பில்லி புவுடனை மட்டும் எல்லா நாட்டுக்காரர்களுக்கும் பிடிக்கும். காரணம், அவர் அவுட்டை கூட அவ்வளவு அழகாக கொடுப்பார்.

விரல் வித்தகன்

விரல் வித்தகன்

ஆள் காட்டி விரலை மடக்கி அவர் அவுட் கொடுக்கும் அழகை பார்க்கும்போது, நமது ஃபேவரைட் பேட்ஸ்மேன் வெளியேறும் அதிர்ச்சியை கூட மறந்திருப்போம். குழந்தைகளுக்கு தேனுடன் சேர்த்து கசப்பு மருந்தை தருவது போன்ற கெட்டிக்காரர் பில்லி பவுடன்.

சிக்சர் மன்னன்

சிக்சர் மன்னன்

பேட்ஸ்மேன் சிரமப்படாமல் ஒரு கிளிக்கில் சிக்சர் அடித்திருப்பார். ஆனால், பில்லி புவுடனோ, தனது உடலை மடக்கி வளைந்து, ஸ்டெப் பை ஸ்டெப்பாக சிக்சருக்கு இரு கைகளையும் தூக்கி காட்டுவார் பாருங்கள். அதற்காகவே, நம் நாட்டு பவுலர் சிக்சரை வாரி வழங்கினாலும் கவலையின்றி கிரிக்கெட் பார்த்தோர் கோடிக்கணக்கானோர்.

நீண்ட பணி

நியூசிலாந்தை சேர்ந்த பில்லி பவுடன், கடந்த 21 வருடங்களாக 200 ஒருநாள் போட்டிகள், 84 டெஸ்ட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார். ஐசிசியின் ப்ரவுன் பெயில்ஸ் விருதை பெற்றுள்ளார்.

நோய் பாதிப்பு

நோய் பாதிப்பு

பில்லி பவுடன் ரெமடாய்டு ஆர்தரிட்டிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட நேரம் மைதானத்தில் நின்று பணியாற்றுவது அவரது உடல் நலத்துக்கு சரியல்ல என்று நியூஸிலாந்தின் ஐசிசி நடுவர்கள் குழுவில் இருந்து பில்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

பிற நாட்டு ரசிகர்களுக்கு எப்படியோ, ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஏனோ, பில்லி மேல் கொஞ்சம் அதிருப்திதான். 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் மோசமான அம்பயர் என பில்லி பவுடனை குறிப்பிட்டனர்.

Story first published: Saturday, June 18, 2016, 11:53 [IST]
Other articles published on Jun 18, 2016
English summary
Billy Bowden may have stood in his last international match, after being dropped from New Zealand Cricket's international panel of umpires.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X