பிசிசிஐ நல்ல முடி்வு எடுக்கணும் ஜக்கம்மா! அம்பயர்கள் வேண்டுதல்

Posted By: Staff

மும்பை: இந்தியாவில் கிரிக்கெட்டின் தலையெழுத்தை ஐபிஎல் போட்டிகள் மாற்றி எழுதியுள்ளன.

ஏற்கனவே உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ), ஐபிஎல் போட்டிகளால், கூரையை பிச்சுக்கிட்டு கொட்டுது.

மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வருவாய் பெருகியுள்ளது. வீரர்கள் காட்டில் பணமழை கொட்டி வருகிறது. சொந்தமாக ஏரோபிளேன் வாங்கலாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகிறார்.

பிரகாச வாழ்க்கை

பிரகாச வாழ்க்கை

அந்தளவுக்கு பலருடைய வாழ்க்கையை கிரிக்கெட் பிரகாசமாக்கியுள்ளது. நாள் முழுவதும் வெயிலில் காய்கிறோமே. எங்களை கவனிக்க மாட்டீர்களா என்று முன்னாள் அம்பயர்கள் தற்போது கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர்.

அம்பயர்கள் முக்கியம் அமைச்சரே!

அம்பயர்கள் முக்கியம் அமைச்சரே!

டிவி அம்பயர், டிஆர்எஸ் முறை என எவ்வளவே நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும், மைதானத்தில் அம்பயர்கள் மிக முக்கியமானவர்கள். ஓய்வு பெற்ற அம்பயர்களுக்கு தற்போது மாதத்துக்கு, ரூ.22,500 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

ஏத்தி கொடுங்க பாஸ்

ஏத்தி கொடுங்க பாஸ்

அதை உயர்த்தி தர வேண்டும் என்று ஓய்வு பெற்ற அம்பயர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மொத்தமாக ஒரு ரொக்கம் வழங்கப்படுகிறது. ஒன்று முதல், 9 டெஸ்ட்களில் விளையாடியுள்ளவர்களுக்கு ஒரே தவணையாக, ரூ.35 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று முன்னாள் அம்பயர்கள், பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

எங்களுக்கெல்லாம் அப்படி இல்லையே

எங்களுக்கெல்லாம் அப்படி இல்லையே

முன்னாள் வீரர்கள், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும், டிவி கமெண்டரிக்கு போய்விடுகிறார்கள். சிலர் கோச்களாக மாறிவிடுகிறார்கள். ஆனால், அம்பயர்களுக்கு அதுபோன்ற ஒரு வாய்ப்பு இல்லை. அதனால் எங்களையும் கவனியுங்க என்று தூண்டில் போட்டுள்ளனர்.

மூன்றாவது அம்பயரின் தீர்ப்பு என்னவோ!

மூன்றாவது அம்பயரின் தீர்ப்பு என்னவோ!

மூன்றாவது அம்பயராக உள்ள பிசிசிஐ நிர்வாகக் குழுவின் முடிவுக்காக, முன்னாள் அம்பயர்கள் காத்திருக்கின்றனர்.

Story first published: Monday, September 11, 2017, 10:10 [IST]
Other articles published on Sep 11, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற