For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியால் வேலை போச்சு!

By Srividhya Govindarajan

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியால், கோச் வேலையில் இருந்து அனில் கும்ப்ளே விலக நேர்ந்தது உண்மையா என்பது விவாதத்துக்கு உரியது. அதே நேரத்தில் கோஹ்லியால், அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பதவி பறிபோனதாக, முன்னாள் அதிரடி வீரர் திலீப் வெங்சர்கார் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்தவர், இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று தந்த இந்திய அணியில் இடம்பெற்ற திலீப் வெங்சர்கார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், 2008ல் நடந்த நிகழ்ச்சி குறித்து அவர் கூறினார். அவர் கூறியதாவது: 2008ல் இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும்போது, 23 வயதுக்குட்பட்டோர் அணியில் இருந்து சிலரை தேர்ந்தெடுக்கலாம் என்று தேர்வுக் குழுவினர் பேசினோம்.

கோஹ்லியின் ஆட்டம் பிடித்திருந்தது

கோஹ்லியின் ஆட்டம் பிடித்திருந்தது

அந்த நேரத்தில், 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது. கேப்டனாக இருந்த விராட் கோஹ்லியை தேர்வு செய்யலாம் என்று நான் கூறினேன். அப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் இந்திய ஜூனியர் அணி விளையாடியதை நான் நேரில் சென்று பார்த்தேன். விராட் கோஹ்லியின் ஆட்டம் பிடித்திருந்தது. அதனால், அவரை அணியில் சேர்க்கலாம் என்று கூறினேன். தேர்வுக் குழுவில் இருந்த சிலரும் ஒப்புக் கொண்டனர்.

டோணி, கோச் ஏற்கவி்லை

டோணி, கோச் ஏற்கவி்லை

ஆனால், டோணி மற்றும் கோச் கேரி கிறிஸ்டன், அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. புதிய வீரர் வேண்டாம் என்று அவர்கள் கூறினார்கள். அப்போது, பிசிசிஐ தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்ரிநாத்தை ஏன் நீங்கள் பரிசீலிக்கவில்லை என்றார். அவருக்கு வாய்ப்பு வரும்போது சேர்த்துக் கொள்வோம் என்று கூறினேன். இதனால் மிகப் பெரிய விவாதம் நடந்தது. ஸ்ரீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பத்ரிநாத் விளையாடியதால், அவரை தேர்வு செய்யும்படி என்னை வற்புறுத்தினார்.

பதவியில் இருந்து நீக்கினார்கள்

பதவியில் இருந்து நீக்கினார்கள்

இதற்கிடையில், தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டு, ஸ்ரீகாந்தை நியமித்தார்கள். விராட் கோஹ்லியை அணியில் சேர்க்க வேண்டும் என்று தேர்வு செய்ததால், என்னுடைய பதவி பறிபோனது. இப்படி வெங்சர்கார் கூறியுள்ளார். ரஜினி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மீடியாவுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அவரை கேட்கலாம் என்று கூறினார். ஆனால், இதில் எப்படி நாம் உறுதி செய்வது.

கிரிக்கெட்டில் அரசியல் விளையாட்டு

கிரிக்கெட்டில் அரசியல் விளையாட்டு

ஆனால், தன்னுடைய கிரிக்கெட் வளர்ச்சிக்கு, வெங்சர்கார் தான் முக்கிய காரணம் என்று கோஹ்லி பலமுறை கூறியுள்ளார். அதனால், வெங்சர்கார் கூறியுள்ளது உண்மையாகவே இருக்கும். கிரிக்கெட் அணித் தேர்வில் என்னென்ன அரசியல் நடக்கிறது என்பது, அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

Story first published: Friday, March 9, 2018, 13:01 [IST]
Other articles published on Mar 9, 2018
English summary
Venksarkar reveals he lost his job because of Kholi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X