For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் முறையாக ரஞ்சி பைனலில் விதர்பா

By Staff

கோல்கத்தா: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலுக்கு முதல் முறையாக விதர்பா அணி முன்னேறியுள்ளது. பரபரப்பாக நடந்த அரை இறுதியில் கர்நாடகாவை, 5 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா வென்றது.

முதல்தர போட்டியான ரஞ்சிக் கோப்பை கிரி்க்கெட் போட்டி, 1934 முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21 மாநிலங்கள் உள்பட, 28 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

Vidarbha enters finals of Ranji first time


பல சுற்றுகள் நடந்துள்ள போட்டி பைனலை எட்டியுள்ளது. ஒரு அரை இறுதியில் பெங்காலை வென்று, 5 முறை சாம்பியனான டெல்லி அணி, 10 ஆண்டுக்குப் பிறகு பைனலுக்கு முன்னேறியது.

கோல்கத்தாவில் நடந்த மற்றொரு அரை இறுதியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில், 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, விதர்பா அணி முதல் முறையாக பைனலுக்கு நுழைந்தது.

விதர்பா முதல் இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்தது. கர்நாடகா, 301 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை முடிவு செய்தது. விதர்பா இரண்டாவது இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்தது.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விதர்பாவின் ரஜ்னீஷ் குர்பானியின் அபார பந்து வீச்சில், 192 ரன்களுக்கு கர்நாடகா சுருண்டது. இரண்டாவது இன்னிங்கில், 7 விக்கெட்கள் என மொத்தம் 12 விக்கெட்களை குர்பானி வீழ்த்தியுள்ளார். முன்னதாக கணேஷ் சதீஷ், 81 ரன்கள், ஆதித்யா சர்வாதே, 55 ரன்கள், அபூர்வ வாங்கடே, 49 ரன்கள் எடுத்து, விதர்பா அணி முன்னிலை பெறுவதற்கு உதவினர்.


வரும், 29ம் தேதி இந்தூரில் நடக்கும் பைனலில் டெல்லியும், விதர்பாவும் மோத உள்ளன.







Story first published: Friday, December 22, 2017, 10:55 [IST]
Other articles published on Dec 22, 2017
English summary
Vidarbha enters finals of Ranji first time
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X