For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் ஹசாரே கோப்பையோட இறுதிப்போட்டி துவங்கியிருக்கு... உத்தரபிரதேச அணி பேட்டிங்

டெல்லி : கடந்த சில தினங்களாக பரபரப்பான ஆட்டங்களை அளித்துவந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

மும்பை மற்றும் உத்தரபிரதேச அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப்போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கியுள்ளது.

5 மாசமா ரசிகர்களை கட்டிப்போட்ட ஐஎஸ்எல் தொடர்... நாளை இறுதிப்போட்டி 5 மாசமா ரசிகர்களை கட்டிப்போட்ட ஐஎஸ்எல் தொடர்... நாளை இறுதிப்போட்டி

இந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தரபிரதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இறுதிப்போட்டி துவக்கம்

இறுதிப்போட்டி துவக்கம்

கடந்த சில தினங்களாக ரசிகர்களுக்கு முழுமையான, சிறப்பான தருணங்களை அளித்துவந்த விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்றைய தினம் மும்பை மற்றும் உத்தரபிரதேச அணிகள் டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதி வருகின்றன.

தீவிர திட்டங்கள்

தீவிர திட்டங்கள்

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்றுள்ள உத்தரபிரதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. மும்பை அணி மிகவும் சிறந்த அணி என்பதால் மிகவும் தீவிரமாக திட்டங்களை வகுத்துள்ளதாகவும் ஆனால் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் உபி அணியின் கேப்டன் கரண் சர்மா தெரிவித்துள்ளார்.

4வது கோப்பைக்கு முயற்சி

4வது கோப்பைக்கு முயற்சி

இதனிடையே, பிரித்வி ஷா தலைமையில் போட்டியை எதிர்கொண்டுள்ள மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி கொள்வதன்மூலம் இந்த தொடரில் தன்னுடைய 4வது கோப்பையை வெற்றி கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடரில் பிரித்வி ஷா இதுவரை 754 ரன்களை எடுத்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் 800 ரன்களை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

சிறப்பான பேட்ஸ்மேன்கள்

சிறப்பான பேட்ஸ்மேன்கள்

இளம் வீரர் கரண் சர்மாவின் தலைமையில் தற்போது உத்தரபிரதேச அணி பேட்டிங்கை மேற்கொண்டுள்ளது. அதிகமான அனுபவம் இல்லாமல் இந்த போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையிலும் இறுதிப்போட்டி வரை தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளது உத்தரபிரதேச அணி. அணியின் பேட்ஸ்மேன்கள் கரண் சர்மா, அக்ஷ்தீப் நாத் மற்றும் உபேந்திர யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

சிறப்பான பிரித்வி ஷா

சிறப்பான பிரித்வி ஷா

அணியின் ஷிவம் சர்மா இதுவரை இந்த தொடரில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றுள்ள நிலையில், யாஷ் தயால், ஷிவம் மவி மற்றும் ஆகிப் கான் ஆகியோரும் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 4 போட்டிகளில் தொடர்ந்து சதமடித்துவரும் பிரித்வி ஷாவை இன்றைய போட்டியில் யார் வீழ்த்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Sunday, March 14, 2021, 10:14 [IST]
Other articles published on Mar 14, 2021
English summary
We intend to stick to our plans as Mumbai is a very good team -Karan Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X