
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்
அவர் விளையாடிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு எதிரானது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் ஈட்டி எறிதலில் கவனம் செலுத்திய வில்ஜோன் கடந்த ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தை நழுவ விட்டார்.

வெள்ளிப் பதக்கம்
ஆனால் நடப்பு ரியோ ஒலிம்பிக்கில் தம்முடைய பதக்க நனவை வில்ஜோன் நிறைவேற்றி விட்டார். ரியோ ஒலிம்பிக்கில் 64.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தி உள்ளார்.

முந்தைய கிரிக்கெட் வீரர்கள்
1908-ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி டக்ளஸ், ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். 1920-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜாக் மெக்பிரையன், ஹாக்கி அணியில் விளையாடி தங்கம் வென்றிருந்தார்.

96 ஆண்டுக்குப் பிறகு
தற்போது 96 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீராங்கனை சன்னிட்டே வில்ஜோன் நடப்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications