For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் மாதிரி 40 வயது வரை ஆடினால், கோலி எல்லா சாதனையையும் முறியடிப்பார்

மும்பை : விராட் கோலி தற்போது தன் பார்மின் உச்சத்தின் இருக்கிறார். பல்வேறு பேட்டிங் சாதனைகளை சரமாரியாக முறியடித்து வருகிறார் கோலி.

கோலி இதே வேகத்தில் இன்னும் பத்து வருடங்கள் பேட்டிங் செய்து வந்தால், கிரிக்கெட்டின் அனைத்து பேட்டிங் சாதனைகளையும் முறியடித்து விடுவார் என கவாஸ்கர் கூறி உள்ளார்.

விராட் கோலிக்கு இன்று (நவம்பர் 5) 30வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை ஒட்டியே கவாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோலியின் வளர்ச்சி

கோலியின் வளர்ச்சி

விராட் கோலி 2008ஆம் ஆண்டு அண்டர் - 19 அணிக்கு தலைமை ஏற்று வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார். அப்போதிருந்தே, கோலியின் பேட்டிங் பற்றிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அடுத்த சில வருடங்களில், இந்திய அணியில் இடம் பிடித்தார் கோலி. அப்போது முதல், இன்று வரை தன் பேட்டிங் முறை, உடற்தகுதி என ஒவ்வொரு விஷயத்திலும் பெரிய முன்னேற்றத்தை காட்டி இருக்கிறார்.

இந்த ஆண்டில் ரன் குவிப்பு

இந்த ஆண்டில் ரன் குவிப்பு

சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 10,000 ரன்களை எட்டியவர் என்ற சாதனையை செய்தார் கோலி. மேலும், 2018ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவராக இருக்கிறார். 14 போட்டிகளில் 1202 ரன்கள் குவித்துள்ளார் கோலி. இதன் சராசரி 133.55 ஆகும்.

40 வயது வரை ஆடினால்..

40 வயது வரை ஆடினால்..

கவாஸ்கர் கூறுகையில், "ஒரு வீரர் இத்தனை உடற்தகுதியுடன் இருந்தால், வெறும் 5-7 வருடங்கள் மட்டுமல்ல, இன்னும் 10 வருடங்கள் கூட ஆட முடியும். சச்சின் போல 40 வயது வரை ஆட முடியும். கோலியும் அந்த வயது வரை ஆடினால், டெஸ்ட் சாதனைகள், ஒருநாள் சாதனைகள், என அனைத்து பேட்டிங் சாதனைகளும் முறியடித்து விடுவார்" என தெரிவித்தார்.

கோலி அதிக சராசரி

கோலி அதிக சராசரி

கோலி ரன் குவிப்பது என்பதோடு, அவரது சராசரியும் அதிகமாகவே உள்ளது. தற்போது கோலியின் டெஸ்ட் சராசரி 54.57, ஒருநாள் சராசரி 59.83, டி20 சராசரி 48.88 ஆகும்.

Story first published: Monday, November 5, 2018, 14:33 [IST]
Other articles published on Nov 5, 2018
English summary
Virat Kohli can break all records says Gavaskar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X