For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நல்லவனாக இருக்கலாம்.. இப்படி ஏமாளியாக இருக்க கூடாது கோலி.. வெடித்தது அவுட் சர்ச்சை!

Recommended Video

WORLD CUP IND VS PAK Kohli out | வெளியேறிய கோலி, வெடித்தது அவுட் சர்ச்சை!

மான்செஸ்டர்: நடுவரும் அவுட் கொடுக்கவில்லை, பந்தும் பேட்டில் படவில்லை, ஆனால் கேட்ச் பிடித்து விட்டதாக நினைத்து விராட் கோலி பெவிலியன், திரும்பிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மான்செஸ்டரில், பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய உலக கோப்பை லீக் போட்டியில், இந்தியா முதலில் பேட் செய்தது. துவக்க வீரர் ரோகித் சர்மாவின் அபாரமான 140 ரன்களுடன், இந்தியா 300 ரன்களை கடந்து வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் 20 பந்துகள் பாக்கியிருந்த, நிலையில் திடீரென மழை வந்த காரணத்தால், போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் தொடங்கியது. அப்போது அமீர் வீசிய பவுன்சர் பந்தை விராட் கோலி மடக்கி அடிக்கமுற்பட்டார்.

தானே வெளியேறிய தானைத் தலைவன்

தானே வெளியேறிய தானைத் தலைவன்

ஆனால், அந்த பந்து விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது, கையுறைக்குள், தஞ்சமடைந்தது. இதையடுத்து விக்கெட் கிடைத்துவிட்டதாக அமீர் கத்திக்கொண்டே ஓடி வந்தார். விக்கெட் கீப்பரும் அவுட்டா என கையை உயர்த்தி கேள்வி எழுப்பினார். ஆனால், நடுவர் அவுட் தரவில்லை. ஆனால், விராட் கோலி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார்.

அம்பயர் சும்மா இருந்தார்

பேட்டில் பந்து பட்டதை, உணர்ந்ததால்தான், அம்பையர் கூட சொல்லாமல், கோலி, பெவிலியன், திரும்பினார் என்றுதான், அனைவருமே நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் டிவியில் ரிப்ளே போடப்பட்டபோது, பந்து பேட்டில் படாமல், விக்கெட் கீப்பரிடம் சென்றது தெரியவந்தது. அதை அம்பயர், சரியாக கணித்துதான் அவுட் கொடுக்காமல் இருந்துள்ளார். ஆனால் கோலி அவசரப்பட்டுவிட்டார்.

இப்போ ஏன் இப்படி

இப்போ ஏன் இப்படி

பொதுவாக நடுவருக்கோ, விக்கெட் கீப்பருக்கோ, தெரியாவிட்டாலும், பேட்ஸ்மேனுக்குத் தான், பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என்பது சரியாக தெரியும். ஆனால் பந்து பேட்டில் படாமல் கோலி, எதற்காக வெளியேறினார் என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெவிலியன் திரும்பிய, விராட் கோலி மற்றும் சக வீரர்கள் தொலைக்காட்சியில், இந்த காட்சியை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பேட்டை ஆட்டிப் பார்த்தனர்

பேட்டை ஆட்டிப் பார்த்தனர்

கோலி தனது பேட்டை ஆட்டி பார்த்தார். அதன்பிறகு தோனி மற்றும் சக வீரர்களும் கோலியின் பேட்டை வாங்கி, ஆட்டியும், அசைத்தும் பார்த்தனர். இதுகுறித்து அணி நிர்வாகம் தரப்பினரிடம், கேட்டபோது, கோலி பந்தை அடிக்க முற்பட்டபோது, பேட்டியிலிருந்து சத்தம் வந்ததாக உணர்ந்தார். எனவே தான் பேட்டில் பந்து பட்டதாக நினைத்து வெளியே வந்தார். ஆனால், பேட்டில் பந்து படாமல் ஏன் அப்படி ஒரு சத்தம் வந்தது என்பதை உறுதி செய்வதற்காக தான் அணி வீரர்கள் அந்த பேட்டை ஆட்டிப் பார்த்தனர். அனேகமாக பேட்டில் ஏதாவது உடைபட்டு, அந்த உடைந்த மரத்துண்டு ஆடியதன், காரணமாக சத்தம் வந்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். எது எப்படியோ, அநியாயமாக விராட் கோலி தன்னைத் தானே அவுட்டாக்கி கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Story first published: Sunday, June 16, 2019, 19:45 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
Virat Kohli declared himself out even with out umpire given and the ball didn't touch his bat as well.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X