10 ஆண்டுகளில் பட்டையைக் கிளப்பிய அணிகள்.. கேப்டன்கள் டோணி, கோலி.. கெளரவித்த ஆஸ்திரேலியா!

10 வருஷத்தில் சிறந்த அணி... இடம்பிடித்த இந்திய வீரர்கள்

மெல்போர்ன்: கடந்த பத்தாண்டுகளில் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் வீரர்களின் பட்டியலைக் கொண்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டெஸ்ட் அணிக்கு விராட் கோலியும் ஒருநாள் சர்வதேச போட்டிக்கு மகேந்திர சிங் தோனியும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தோனியை கேப்டனாக கொண்ட ஒருநாள் சர்வதேச அணியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச அளவில் சாதனைகளை புரிந்த வீரர்களைக் கொண்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளின் அணிகளை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

கேப்டனாக விராட் கோலி தேர்வு

கேப்டனாக விராட் கோலி தேர்வு

கடந்த பத்தாண்டுகளின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியை தேர்வு செய்துள்ளது.

3வது இடத்தை விட்டுக் கொடுத்த கோலி

3வது இடத்தை விட்டுக் கொடுத்த கோலி

இந்த அணியில் இங்கிலாந்தின் முன்னாள் ஆட்டக்காரர் அலாஸ்டேர் குக் மற்றும் ஆஸ்திரேயாவின் டேவிட் வார்னர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 3வது இடத்தில் விளையாடுகிறார். கோலி ஐந்தாவது பேட்ஸ்மேனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து இரட்டை வீரர்கள்

இங்கிலாந்து இரட்டை வீரர்கள்

இந்த அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களாக தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

இந்த அணியில் ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர் நாதன் லியோன் மற்றும் இந்திய பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கேப்டனாக எம்.எஸ். தோனி தேர்வு

கேப்டனாக எம்.எஸ். தோனி தேர்வு

இதேபோல கடந்த பத்தாண்டுகளின் சிறந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளின் அணியையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதற்கு கேப்டனாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் விக்கெட் கீப்பங்கிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா பாராட்டு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா பாராட்டு

கடந்த 2011ல் இந்தியா தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் எம்.எஸ்.தோனி என்று பாராட்டியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அவரது விக்கெட் கீப்பிங் வியப்பிற்குரியது என்றும் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள் போட்டிக்கான தோனி தலைமையிலான இந்த அணியில் அவருக்கு கீழ் விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Cricket Australia announces Virat Kohli and MS Dhoni as captains of Test & ODI for Decade
Story first published: Tuesday, December 24, 2019, 14:39 [IST]
Other articles published on Dec 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X