For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி!

Recommended Video

எங்களுக்கு இதுதான் முக்கியம்.. உண்மையை சொன்ன கோலி

ஐதராபாத்: சர்வதேச டி20 போட்டிகளின் தரவரிசைப்பட்டியலில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ரேங்கிங் குறித்து கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஐசிசி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இதேபோல சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்திற்கு கீழே சில புள்ளிகள் இடைவெளியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் சர்வதேச டி20 போட்டிகளில் 5வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கேப்டன் கோலி, ரேங்கிங் குறித்து கவலையில்லை என்றும் பேட்டிங் உள்ளிட்ட அடிப்படைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்.. ஒரு பக்கம் பந்த்திற்கு சிக்கல்.. இன்னொரு பக்கம் ராகுலுக்கு லக்! இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்.. ஒரு பக்கம் பந்த்திற்கு சிக்கல்.. இன்னொரு பக்கம் ராகுலுக்கு லக்!

சர்வதேச டி20 போட்டிகளில் 5வது இடம்

சர்வதேச டி20 போட்டிகளில் 5வது இடம்

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை பிடித்துள்ள இந்தியா, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணியின் புள்ளிகளில் இருந்து சில புள்ளிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தையும் சர்வதேச டி20 போட்டிகளில் 5வது இடத்திலும் உள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு

இன்று துவங்கவுள்ள இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான சர்வதேச டி20 தொடரின் முதல் நாள் ஆட்டத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, டி20 ரேங்கிங் குறித்து கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடருக்காக பயிற்சி

டி20 உலக கோப்பை தொடருக்காக பயிற்சி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய வீரர்களின் பேட்டிங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சோதனை செய்து பார்க்க முடியாத பல விஷயங்களை டி20 போட்டிகளில் சோதிக்கலாம் என்று தெரிவித்துள்ள கோலி, இளைஞர்களுக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பு அளித்து அவர்களின் திறமைகள் சோதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

தரவரிசை குறித்து தீர்மானிக்க முடியாது

தரவரிசை குறித்து தீர்மானிக்க முடியாது

டி20 போட்டிகளில் இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், எல்லா நேரங்களிலும் சிறந்த வீரர்கள் மட்டுமே அதில் விளையாடுவதில்லை. அதனால் தரவரிசை குறித்து டி20 போட்டிகளில் தீர்மானம் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றி ஒன்றே குறிக்கோள்

வெற்றி ஒன்றே குறிக்கோள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச டி20 உலக கோப்பை தொடரில் வெற்றியை குறிக்கோளாக கொண்டு, இந்திய அணியின் வலிமையான வீரர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள் என்றும் கோலி கூறினார். புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா டி20 போட்டிகளில் நிலையான பந்து வீச்சை செயல்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய கோலி, தீபக் சஹாரும் சிறந்த பந்துவீச்சை தருவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பையில் மிளிர்வார்

டி20 உலக கோப்பையில் மிளிர்வார்

ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துபவர் முகமது ஷமி என்று கூறியுள்ள விராட் கோலி, டி20 உலக கோப்பை தொடரில் யார்க்கர்களை திறம்பட ஷமி பிரயோகிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, December 6, 2019, 12:26 [IST]
Other articles published on Dec 6, 2019
English summary
Virat Kohli doesn't take India's Ranking in T20 seriously wants to focus on basics
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X