For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர் பர்பாமென்ஸ்.... பாலி உம்ரிகர் விருது கோஸ் டூ விராட் கோஹ்லி!

சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடிய வீரருக்கான பாலி உம்ரிகர் விருது விராட் கோஹ்லிக்கு வழங்கப்படுகிறது.

Recommended Video

2 ஆண்டுக்கான பாலி உம்ரிகர் விருது வாங்கும் விராட் கோஹ்லி- வீடியோ

பெங்களூரு: இந்திய அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கான பிசிசிஐ விருது வழங்கப்பட உள்ளது. இதில் இரண்டு ஆண்டுகளிலும் சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகர் விருது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட உள்ளது.

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை பிசிசிஐ வழங்கி வருகிறது. அதன்படி, கடந்த 2016-17, 2017-18க்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

பெங்களூருவில் வரும் 12ம் தேதி நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளிலும் சிறப்பாக விளையாடியதற்கான பாலி உம்ரிகர் விருது, கேப்டன் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட உள்ளது.

2016-17ல் டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் கோஹ்லி 1847 ரன்கள் எடுத்தார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரான 243 ரன்களை அவர் எடுத்தார்.

2 விருது பெறுகிறார் கோஹ்லி

2 விருது பெறுகிறார் கோஹ்லி

2017-18 சீசனில் ஒருதினப் போட்டிகளில் 1111 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 896 ரன்களும் எடுத்தார் கோஹ்லி. இரண்டு ஆண்டுகளிலும் சிறந்த வீரராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த வீராங்கனைகள்

சிறந்த வீராங்கனைகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில், 2016-17க்கான சிறந்த வீராங்கனை விருதை ஹர்மன்பிரீத் கவுரும், 2017-18க்கான விருதை ஸ்மிருதி மந்தானாவும் பெறுகின்றனர்.

முதல்முறையாக விருது

முதல்முறையாக விருது

2017 உலகக் கோப்பை அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ரன்கள் குவித்தார் ஹர்மன்பிரீத் கவுர். தற்போதும் அதே பார்மில் உள்ளார். முதல் முறையாக மகளிர் பிரிவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

டால்மியாவுக்கு கவுரவம்

டால்மியாவுக்கு கவுரவம்

பிசிசிஐயின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியாவின் நிர்வாகத் திறமையை கவுரவிக்கும் வகையில், ஆடவர் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அதிக ரன்கள் குவித்தோர் மற்றும் அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கு அவருடைய பெயரில் விருது வழங்கப்படும். அதேபோல் மகளிர் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதும் அவருடைய பெயரில் வழங்கப்படும். இதைத் தவிர, 9 பிரிவுகளுக்கான பரிசுத் தொகையும் ஒரு லட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.1.5 லட்சம் வழங்கப்பட உள்ளது.

Story first published: Friday, June 8, 2018, 8:01 [IST]
Other articles published on Jun 8, 2018
English summary
Virat kohli selected to receive poly umrikar awards.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X