திரும்பி பாக்காம போய்க்கிட்டே இருக்கணும் -ஆஸ்திரேலியா வெற்றி குறித்து விராட் கோலி

பெங்களூரு : ஆஸ்திரேலியா போன்ற வலிமையான அணியுடன் மோதி தொடரை கைப்பற்றியது திருப்தியளிப்பதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடனான தொடரை இழந்த நிலையில் தற்போது வென்றுள்ளது குறித்தும் விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி திரும்பி பார்க்காமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கவே விரும்புவதாக விராட் கோலி கூறியுள்ளார்.

3வது சர்வதேச ஒருநாள் போட்டி

3வது சர்வதேச ஒருநாள் போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி அபாரம்

இந்திய அணி அபாரம்

கடந்த 14ம் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து ராஜ்காட் மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றி கொண்டு தொடரை கைப்பற்றியுள்ளது.

சதமடித்த ரோகித் சர்மா

சதமடித்த ரோகித் சர்மா

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 29வது சதத்தை பதிவு செய்தார்.

விராட் -ரோகித் கூட்டணி

விராட் -ரோகித் கூட்டணி

போட்டியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் அணியின் ஸ்கோர் 69 இருந்தநிலையில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ரோகித் ஷர்மா மற்றும் கோலி இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 137 ரன்களை குவித்தனர். இந்த ஸ்கோர் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

திருப்தியளிப்பதாக பேட்டி

திருப்தியளிப்பதாக பேட்டி

பெங்களூருவில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதிப்போட்டியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி இந்த வெற்றி திருப்தியளிப்பதாக உற்சாகத்துடன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தோல்வி

கடந்த ஆண்டு தோல்வி

கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், தற்போது அதை சமன் செய்யும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளதாக விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கருத்து

விராட் கோலி கருத்து

ஆஸ்திரேலியா போன்ற வலிமையான அணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த விராட் கோலி, இதேபோல பின்னோக்கி பார்க்காமல் இந்திய அணி தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கவே விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

5 சர்வதேச டி20 போட்டிகள்

5 சர்வதேச டி20 போட்டிகள்

இதையடுத்து இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு 5 சர்வதேச டி20 போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் போட்டி தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Captain Virat Kohli wants to go Upwards and Onwards with team India
Story first published: Monday, January 20, 2020, 11:31 [IST]
Other articles published on Jan 20, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X