For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் இந்த இரட்டை வேடம்.. ஆஸியை போட்டு தாக்கிய சேவாக்.. அமைதி காப்பது ஏன் என கேள்வி ?

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஒன்றரை நாளுக்குள் முடிந்து விட்டது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் வெறும் 144.2 ஓவர்கள் தான் வீசப்பட்டது.அதில் 34 விக்கெட்டுகள் பந்து வீச்சாளர்களால் எடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாகிஸ்தான் போன்ற நாடுகள் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் அமைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியா அமைத்த ஆடுகளத்தால் போட்டி ஒன்றரை நாளுக்குள் முடிந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

77 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. 419 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. லயான் சாதனை 77 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. 419 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. லயான் சாதனை

வாய் பேசி இருப்பார்கள்

வாய் பேசி இருப்பார்கள்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேவாக் 144.2 ஓவர்கள் மொத்தம் வீசப்பட்டு இருக்கிறது. ஆனால் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்து விட்டது. ஆனால் ஆடுகளம் எப்படி அமைக்க வேண்டும் என மற்றவர்களுக்கு ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பாடம் எடுக்கிறது. இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவு என்று பலரும் வாய் பேசி இருப்பார்கள்.

பாண்டிங் விமர்சனம்

பாண்டிங் விமர்சனம்

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கிறது என்று கூறுவார்கள். இப்போது மட்டும் ஏன் அவர்கள் அமைதி காக்கிறார்கள்.இப்படி இரட்டை வேஷம் போடும் நபர்களை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்று சேவாக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நிச்சயமாக இது மோசமான ஆடுகளம் தான் என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.

 வாழ்நாளில் பார்த்ததில்லை

வாழ்நாளில் பார்த்ததில்லை

ஐசிசி இதனை மோசம் என்று தரம் பிரிக்க வாய்ப்பு இருப்பதாக பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த போட்டியில் விளையாடியது குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கார் இரண்டு நாட்களில் என்ன நடந்தது என்று கூட எனக்கு புரியவில்லை. போட்டி ஆரம்பிப்பதற்குள் முடிந்து விட்டது என் வாழ்வில் இந்த மாதிரி ஒரு ஆடுகளத்தை நான் பார்த்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்களும் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ஆஸ்திரேலியாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுவே ஆசிய ஆடுகளங்களில் முதல் ஒவரிலே பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டால் வெளிநாட்டவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருப்பார்கள். ஆனால் இப்போது அனைவரும் அமைதி காப்பதாக கேள்வி எழுப்பி உள்ளனர். மொத்தத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

Story first published: Sunday, December 18, 2022, 18:06 [IST]
Other articles published on Dec 18, 2022
English summary
Virendar sewag condenms foreign commentators and australia board about the gabba pitch ஏன் இந்த இரட்டை வேடம்.. ஆஸியை போட்டு தாக்கிய சேவாக்.. அமைதி காப்பது ஏன் என கேள்வி ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X