For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் பார்மில இல்லாததுதான் பிரச்சினை... மத்தபடி கை, கண்ணெல்லாம் நல்லாதான் இருக்குது

மும்பை : விராட் கோலியின் கை மற்றும் கண்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், ஒரேநாளில் அவை பாதிப்படையாது என்றும் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IND VS NZ | Kapil Dev says Kohli needs to Practice

விராட் கோலி தன்னுடைய பார்மில் இருந்து கிழிறங்கி உள்ளதாகவும், அவருடைய லக்கும் அவரை கைவிட்டுவிட்டதாகவும் சேவாக் மேலும் கூறியுள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான 3 தொடர்களில் இந்திய அணி மோதிய நிலையில் இரண்டு தொடர்களில் ஒயிட்வாஷ் ஆகியது. இந்த தொடர்களில் சிறப்பாக விளையாடாத விராட் கோலி தன்னுடைய கண்பார்வையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் மோசமான தோல்வி

இந்தியாவின் மோசமான தோல்வி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 3 தொடர்கள் நடைபெற்ற நிலையில், முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, தொடர்ந்து ஆடிய சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில்நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது.

பல்வேறு விமர்சனங்கள்

பல்வேறு விமர்சனங்கள்

இந்த 3 தொடர்களிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை கேப்டன் விராட் கோலி பதிவு செய்ய தவறினார். மூன்று தொடர்களிலும் சேர்த்து அவர் மொத்தமாக 218 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். மேலும் டெஸ்ட் தொடரில் 38 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதனால் அவர் பீல்ட் அவுட் ஆனதாக பல்வேறு விமர்சனங்கள் அவர்குறித்து கூறப்பட்டன.

முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து

முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து

இந்நிலையில் விராட் கோலி தன்னுடைய பார்வைத் திறனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வயதாகிவிட்டதால் அவருடைய கண் மற்றும் கைகள் ஒத்துழைக்க மறுப்பதாகவும் அவருடைய பலமான ஸ்விங் பால்களே தற்போது அவருடைய பலவீனமாக மாறியுள்ளதாகவும் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்திருந்தார்.

முன்னாள் பேட்ஸ்மேன் சேவாக்

முன்னாள் பேட்ஸ்மேன் சேவாக்

இதனிடையே விராட் கோலியின் கண்கள் மற்றும் கைகள் சரியாகவே உள்ளதாகவும், ஒரே நாளில் அவரை பாதிப்படைய முடியாது என்றும் முன்னாள் ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்தில் ஸ்விங் பந்துகளை அதிகமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு தக்க மாற்றிக்கொண்டு ரன்களை குவிப்பது சவாலான விஷயம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பந்துகளை சரியாக எதிர்கொள்ளவில்லை

பந்துகளை சரியாக எதிர்கொள்ளவில்லை

மேலும் விராட் கோலி தன்னுடைய பார்மிலிருந்து இறங்கியுள்ளதாகவும், பந்துகளை சரியாக எதிர்கொள்வதில் அவருக்கு சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சேவாக் மேலும் தெரிவித்தார். விராட் கோலி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறமுடியாது கூறியுள்ள சேவாக், கோலிக்கு அவரது லக்கும் கைகொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, March 5, 2020, 19:37 [IST]
Other articles published on Mar 5, 2020
English summary
Virender Sehwag Points out Virat Kohli's failure with the Bat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X