ஜில்ஜில் ஐஸில் நடந்த கிரிக்கெட்.. புயலாக வந்த அக்தர்.. வானவேடிக்கை காட்டிய சேவாக்.. செம்ம மேட்ச்!

Posted By:

செயின்ட் மோரிட்ஸ்: சுவிட்சர்லாந்தில் பனிப்பகுதியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று இருக்கிறது. அங்கு இருக்கும் பிரபல செயின்ட் மோரிட்ஸ் சுற்றுலா தளத்தில் இருக்கும் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்துள்ளது.

இதற்கு ஐஸ் கிரிக்கெட் சேலன்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அந்த நாட்டைச் சேர்ந்த பல உள்நாட்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

அதேபோல் ஷேவாக், அக்தர் போன்ற முன்னாள் ஜாம்பவான்களும் கலந்து கொண்டார்கள். இந்தப் போட்டி ஜில்ஜில் ஐஸில் மிகவும் திரில்லாக நடந்தது.

அப்படியா?

அப்படியா?

இதற்காக சுவிட்சர்லாந்தில் இருக்கும் பல முக்கிய நபர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் இப்போதுதான் முதல்முறை கிரிக்கெட் போட்டியை பார்த்ததாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் இது பார்க்க அப்படியே கோல்ப் போட்டி போல இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

எப்படி

எப்படி

இங்கும் மிகவும் குளிரும் என்பதால் 3 உடைகள் அணிந்துள்ளனர். அதுபோல் இதற்காகத் தனி பேட்கள்,பிட்ச் விரிப்பு உருவாக்கி இருக்கிறார்கள். முக்கியமாக அங்கு விளையாட ஏதுவாக பந்தில் நிறைய மாற்றம் செய்யப்பட்டும் இருக்கிறது.

நிறைய கஷ்டம்

நிறைய கஷ்டம்

இந்தப் பிட்சில் விளையாடுவது மிகவும் கடினம் என்று சேவாக் கூறியுள்ளார். அதேபோல் பந்து வீசுவதும் கஷ்டமாக இருந்தது என்று அக்தர் கூறியுள்ளார். லேசாக மாற்றிப் போட்டாலும் பேட்ஸ்மேன் மோசமாக அடிவாங்க வாய்ப்பு உள்ளது என்றுள்ளார்.

சூப்பர் ஷாட்

இதில் சேவாக் அதிரடியாக ஆடினார். எப்போதும் போல அக்தர் பந்துகளை பறக்கவிட்டார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த ஜில்ஜில் வீடியோவை பார்க்கவே குளிர்ச்சியாக இருக்கிறது.

Story first published: Friday, February 9, 2018, 11:34 [IST]
Other articles published on Feb 9, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற