For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவனா இருந்தாலும் அடிச்சி ஆடுங்க.. இளம் வீரர்களுக்கு லட்சுமண் கட்டளை.. பயிற்சி முகாமில் நடந்தது என்ன?

வெல்லிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் டி20 போட்டிக்காக இந்திய அணி இன்று பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

மாற்றங்கள் மட்டுமே எப்போதும் மாறாத ஒன்று. கபில்தேவ், கவாஸ்கர் காலத்திற்கு பிறகு சச்சின், கங்குலி காலம் வந்தது. அதன் பிறகு தோனி, யுவராஜ் , சேவாக் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்.

இவர்களுக்கு பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா, தவான் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டை ஆண்டனர். தற்போது இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை களத்திற்கு நுழைந்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எமனாக மாறிய பாகிஸ்தான்.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. கடைசி நேரத்தில் கூடிய பலம்! நியூசிலாந்துக்கு எமனாக மாறிய பாகிஸ்தான்.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. கடைசி நேரத்தில் கூடிய பலம்!

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

இதன் ஆரம்ப புள்ளி, வரும் 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 2013ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. கோலி, ரோகித் ஆகியோர் கேப்டனாக இருந்தும், டி20 உலககோப்பையில் இந்தியாவால் இறுதிப் போட்டிக்கு கூட போகவில்லை. இதனால் சீனியர்களை நீக்கிவிட்டு டி20 கிரிக்கெட்டில் புதிய அணியை கட்டமைக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

சராசரி வயதே 25

சராசரி வயதே 25

இதற்கான ஆரம்ப புள்ளியாக தான் நியூசிலாந்து தொடர் உள்ளது. முற்றிலும் சீனியர்கள் இல்லாத இளம் படையை இந்திய அணி நியூசிலாந்துக்கு அனுப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச வயதான வீரர்கள் என்றால் 32 வயதான சூர்யகுமாரும், புவனேஸ்வர் குமாரும் தான் உள்ளனர். மற்றவர்களுடைய சராசரி வயது பார்த்தால் 25 தான் இருக்கும். மேலும் பயிற்சியாளர் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய அணுகுமுறை

புதிய அணுகுமுறை

இதனால் நியூசிலாந்து தொடரில் விவிஎஸ் லட்சுமண் தான் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அடுத்த 2024ஆம் ஆண்டு டி20 உலககோப்பைக்கு இந்திய அணியை தயாரிக்கும் பணி தற்போதே தொடங்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய அணுகுமுறை, புதிய கேம் என அனைத்திலும் புதியதை நடைமுறைப்படுத்த நியூசிலாந்து தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இளம் வீரர்களிடம் லட்சுமணன் பேசி இருக்கிறார்.

அடித்து ஆடுங்கள்

அடித்து ஆடுங்கள்

அப்போது டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை பொறுத்தவரை இது புதிய அதித்யாயம். நீங்கள் நினைத்தால் அடுத்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று கோப்பையை வெல்லலாம். நீங்கள் எந்த பந்துவீச்சாளரையும், பேட்ஸ்மேனையும் பார்த்து அஞ்ச கூடாது. பயம் இன்றி அதிரடியாக ஆட வேண்டும். அனைவரும் களத்தில் ஆக்கோரஷமாக பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அதிரடியை காட்டுங்கள். அதற்காக தான் நீங்கள் அணியில் இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 16, 2022, 18:43 [IST]
Other articles published on Nov 16, 2022
English summary
VVS Laxman Fiery speech to young Indian team players
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X