For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அங்க என்னப்பா சத்தம்... மைதானத்தில் சண்டை போட்ட பாக்., ஆஸி. வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!

By Veera Kumar

அடிலெய்டு: விளையாட்டில் மோதுங்கள் என்றால், கெட்ட வார்த்தை பேசி மோதிக் கொண்டனர் பாகிஸ்தானின் வகாப் ரியாசும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனும். இதற்காக அவ்விருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக கோப்பை 3வது காலிறுதி போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் பேட் செய்தபோது, ஆஸி. பவுலர் ஸ்டார்க் அவரை சீண்டினார்.

இதற்கு பதிலடியாக, ஆஸ்திரேலிய அணியின் வாட்சன் பேட் செய்தபோது அவரை சீண்டினார், வகாப் ரியாஸ். வாட்சனின் அருகே சென்று கைதட்டுவது , சிரிப்பது, கமான்.. கமான் என்று கத்துவதாக இருந்தார் வகாப் ரியாஸ். அவர் வீசிய பவுன்சர் பந்துகளில் வாட்சன் திணறியதால், ஆட்டம் மேலும் சூடேறியது.

இதனிடையே, நடுவரின் அறிவுறுத்தலையும் மீறி, 33வது ஓவரில் வாட்சன், வகாப்பிடம் திருப்பி சண்டை போட்டார். இந்த மோசமான சம்பவம், சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதனிடையே வகாப் ரியாசுக்கு, போட்டி ஊதியத்தில் 50 விழுக்காடும், வாட்சனுக்கு 15 விழுக்காடும் பிடித்தம் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இருவரும் தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளதால், விசாரணை தேவையில்லை என்றும் ஐசிசி தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

Story first published: Saturday, March 21, 2015, 12:06 [IST]
Other articles published on Mar 21, 2015
English summary
Pakistan fast bowler Wahab Riaz was fined 50 per cent of his match fee while Australian all-rounder Shane Watson was penalised 15 per cent of his after their angry clash in yesterday's World Cup quarter-final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X