தினேஷ் கார்த்திக்கால் வாஷிங்டன் சுந்தரை மறந்துவிட்டோம்.. புதிய சாதனை படைத்த இன்னொரு தமிழன்

Posted By:
தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் வாஷிங்டன் சுந்தரை மறந்துட்டோமே!- வீடியோ

சென்னை: முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் செய்த சாதனை காரணமாக வாஷிங்டன் சுந்தர் செய்த சாதனை மறைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முழுக்க சிறந்த பவுலிங்கை வீசியது வாஷிங்டன் சுந்தர் மட்டுமே.

இவரது ஐசிசி ரேங்கிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த போட்டியின் மூலம் இவர் புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார்.

சிறிய வயதில் சாதனை

சிறிய வயதில் சாதனை

வாஷிங்டன் சுந்தர் முத்தரப்பு போட்டியில் தொடர் நாயகன் விருது வாங்கி இருக்கிறார். மிக குறைந்த வயதில், 18 வருடம் 164 நாட்களில் தொடர் நாயகன் விருது வாங்கிய முதல் வீரர் இவர்தான். இதற்கு முன்பு சிலர் 18 வயதில் தொடர் நாயகன் விருது வாங்கியுள்ளனர். ஆனால் நாட்கள் அடிப்படையில் அவர்களைவிட இவர் இளமையானவர்.

பிங்கர் ஸ்பின்னர் சுந்தர்

பிங்கர் ஸ்பின்னர் சுந்தர்

தற்போது இந்திய அணியில் இருக்கும் பிங்கர் ஸ்பின்னர் இவர் மட்டுமே. அஸ்வின் லெக் ஸ்பின்னிற்கு மாறிவிட்டார். இதனால் தற்போது வாஷிங்டன் சுந்தருக்கான தேவை அதிகம் ஆகி உள்ளது.

சூப்பர்

சூப்பர்

இந்த தொடரில் மிகவும் சிறப்பாக பந்து வீசியது வாஷிங்டன் சுந்தர்தான். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாஹல் கூட சரியாக பந்து வீசவில்லை. தனக்கு கொடுத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் சுந்தர். அஸ்வின் கூட பவுலிங் ஸ்டைலை மாற்றியுள்ள போது, இவர் தன்னுடைய ஸ்டைலில் சிறப்பாக பந்து வீசுகிறார்.

சூப்பர் பவுலிங்

சூப்பர் பவுலிங்

கடைசியாக நடந்த 5 போட்டிகளில் இவர் 1/20, 3/22, 2/21, 0/23, 2/28 என்று பந்து வீசி இருக்கிறார். இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இவர் விக்கெட் எடுக்கவில்லை. 4 ஓவர் போட்டு அதிகாக ஓவருக்கு 5.90 ரன்களே கொடுத்துள்ளார். இந்த தொடரில் சிறந்த எக்கனாமி இதுதான்.

ரேங்க்

ரேங்க்

இவர் இந்திய அணியின் உலகக் கோப்பை பட்டியலில் தேர்வாக வாய்ப்பு இருக்கிறது. தற்போது இவர் டி-20 ஐசிசி பவுலிங் ரேங்கிங்கில் 151ல் இருந்து 31வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் இவர் 10 இடத்திற்குள் வர முடியும்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Ind won the final match against Bangladesh in Sri Lanka. India lifts Nidahas Trophy. Mind blowing last two overs the match between Ind and Bangladesh, has changed the result. Washington Sundar becomes youngest man to get Man of the series award.
Story first published: Tuesday, March 20, 2018, 11:44 [IST]
Other articles published on Mar 20, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற