கெளம்புங்க ஜடேஜா..! பிசிசிஐயை அன்னாந்து பார்க்க வைத்த வாசிங்டன் சுந்தர்.. அப்படி என்ன செய்தார்?

ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சுழற் பந்துவீச்சாளர் என்ற பொறுப்பை ரவீந்திர ஜடேஜா பல ஆண்டுகளாக வகித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடும் போது காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார் .

நியூசிலாந்துக்கு எமனாக மாறிய பாகிஸ்தான்.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. கடைசி நேரத்தில் கூடிய பலம்! நியூசிலாந்துக்கு எமனாக மாறிய பாகிஸ்தான்.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. கடைசி நேரத்தில் கூடிய பலம்!

ஜடேஜா காயம்

ஜடேஜா காயம்

அதற்கு முன்பே காயம் ஏற்பட்டதால் தென்னாப்பிரிக்கா தொடரில் கூட அவர் பங்கேற்கவில்லை.இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த ஜடேஜாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனது முழு உடல் தகுதியை ஜடேஜா எட்டி வருகிறார்.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

இதனால் வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ஜடேஜா சேர்க்கப்பட்ட நிலையில், தமக்கு காயம் குணமாகவில்லை என்று கூறிவிட்டு தனது மனைவிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜடேஜாவின் இந்த செயல் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தையும் அதிருப்தி அடைய செய்தது.

தடுமாறிய இந்திய அணி

தடுமாறிய இந்திய அணி

இந்த நிலையில் தான் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனது திறமையை நிரூபித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 45 புள்ளி 4வது ஓவரின் 254 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. சஞ்சு சாம்சன் முக்கிய கட்டத்தில் வெளியேறியதால் இந்திய அணி என்ன செய்யப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அப்போது களத்துக்கு வந்த வாஷிங்டன் சுந்தர், யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக விளையாடினார்.குறிப்பாக மைதானத்தில் எங்கு அடித்தால் ரன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் தனது ஷாட்களை விளாசினார். 16 பந்துகளை எதிர் கொண்ட வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களை விளாசினார்.இதில் மூன்று பவுண்டரிகளும் மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும்.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

இதன் காரணமாக இந்திய அணி 306 ரன்கள் என்ற இழக்கை எட்டியது. இதனைத் தொடர்ந்து பந்து வீச்சிலும் வாஷிங்டன் சுந்தர் கலக்கினார். நேர்த்தியாக பந்து வீசி நியூசிலாந்து அணிகளின் ரன்களை ஒரு முனையில் இருந்து வாஷிங்டன் சுந்தர் கட்டுப்படுத்தினார். அவர் ஏழு ஓவர் வீசி இருந்த நிலையில் விக்கெட்டுகளை எடுக்காத நிலையில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

ஒரே ஒரு குறை

ஒரே ஒரு குறை

வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ரன் அடிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறினர். இதன் காரணமாக ஜடேஜா இடத்தில் விளையாடும் வாஷிங்டன் சுந்தர் அவரைப் போலவே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால் ஜடேஜாவின் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் சுந்தரிடம் எவ்வளவு திறமை இருக்கிறதோ அந்த அளவுக்கு அவரிடம் ஒரு குறையும் இருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் எளிதில் காயம் இடக்கூடிய வீரராக இருக்கிறார். அதனை மட்டும் அவர் சரி செய்து கொண்டால் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
washington sundar brilliant performance puts jadeja place in danger
Story first published: Friday, November 25, 2022, 14:48 [IST]
Other articles published on Nov 25, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X