For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போதைய பேட்ஸ்மேனுக்கு ஏன் பந்துவீச தெரியவில்லை.. காரணத்தை சரியாக கணித்த வசீம் ஜாபர்.. மாறுமா ?

மும்பை : இந்திய கிரிக்கெட்டில் தற்போது உள்ள பேட்ஸ்மன்களுக்கு ஏன் பந்து வீச தெரியவில்லை என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் சரியாக கணித்துள்ளார்.

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், சேவாக் ,கங்குலி யுவராஜ் ரெய்னா என அனைத்து வீரர்களும் பந்து வீசுவார்கள். அவ்வளவு ஏன் விக்கெட் கீப்பரான தோனிக்கு கூட எப்படி பந்து வீச வேண்டும் என தெரியும்.

அவர் ஒருநாள் போட்டியில் விக்கெட்டுகளை கூட எடுத்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ் பார்த்து வளர்ந்த கிரிக்கெட் தலைமுறையில் ஏதேனும் ஒரு இரண்டு பேட்ஸ்மேனுக்கு மட்டுமே வந்து வீசு தெரியாமல் இருந்திருக்கும்.

கின்னஸ் உலக சாதனை படைத்த பிசிசிஐ.. ஐபிஎல் போட்டியின் மூலம் கிடைத்த பெருமிதம்.. எதற்காக கிடைத்தது? கின்னஸ் உலக சாதனை படைத்த பிசிசிஐ.. ஐபிஎல் போட்டியின் மூலம் கிடைத்த பெருமிதம்.. எதற்காக கிடைத்தது?

தலைகீழ் மாறிவிட்டது

தலைகீழ் மாறிவிட்டது

ஆனால் இப்போது நிலைமை தலைகீழ் மாறிவிட்டது. தற்போது ஒரு பேட்ஸ்மேனுக்கு தான் இப்போது பந்து வீசவே தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வசீம் ஜாஃபர் , சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர்கள் சிறப்பாக விளையாடியும் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் நம்மிடம் ஆல் ரவுண்டர்கள் இல்லை. அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் திறமை இல்லை.

சரியாக கையாள்வதில்லை

சரியாக கையாள்வதில்லை

ஏன் இப்போது பார்ட் டைம் பவுலர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைப்பது இல்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். அதற்கு காரணம் நாம் ஆல்ரவுண்டர்களை சரியாக கையாள்வதில்லை. ஏனென்றால் இந்தியாவில் அதிக ஆல்ரவுண்டர்கள் வருவதில்லை. இதன் காரணமாக கிடைக்கும் வீரர்களை எல்லாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு அனுப்பி வைத்து விடுகிறோம்.

நேரம் வழங்குங்கள்

நேரம் வழங்குங்கள்

அவர்களும் ஒரு சில போட்டியில் சொதப்பி விடுகிறார்கள். இதனை அடுத்து அவர்களை அப்படியே அணியை விட்டு நீக்கி விடுகிறோம். விஜய் சங்கர், வெங்கடேஷ் ஐயர், சிவம் துபே ,குருணல் பாண்டியா போன்றோர் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்ற ஆல் ரவுண்டர்களிடம் நாம் பொறுமை காக்க வேண்டும். அவர்கள் அனுபவத்தை தேடிக்கொள்ள நாம் நேரம் வழங்க வேண்டும்.

நவீனமயமான பயிற்சி

நவீனமயமான பயிற்சி

இதேபோன்று பார்ட் டைம் பவுலர்கள் கூட இப்போது கிடைக்காததற்கு நவீன மயமான பயிற்சி முறையே காரணம். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்ய பவுலிங் மெஷின் மற்றும் Throwdown specialist என பல வசதிகள் கிடைக்கிறது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சியின் போது மற்றவர்களுக்கு பந்து வீசுவதை நிறுத்தி விடுகிறார்கள். இதன் மூலம் தங்களுடைய பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துவதால், எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை என்று வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இந்த கருத்து மிகவும் அறிவுபூர்வமான ஒன்று என்பதால் இது குறித்து பிசிசிஐ விரைவில் நடவடிக்கை எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Story first published: Sunday, November 27, 2022, 23:51 [IST]
Other articles published on Nov 27, 2022
English summary
Wasim jaffer finds the reason why current batsman dont have the bowling skills இப்போதைய பேட்ஸ்மேனுக்கு ஏன் பந்துவீச தெரியவில்லை.. காரணத்தை சரியாக கணித்த வசீம் ஜாபர்.. மாறுமா ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X