முடிஞ்சா கண்டுபிடிங்க... இந்திய அணி மாற்றத்திற்காக வசீம் ஜாஃபர் போட்ட புதிர்... குழம்பும் ரசிகர்கள்!

புனே: 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என கோலிக்கு வித்தியாச முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை புனேவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ள முறை ரசிகர்களை குழப்பியுள்ளது.

ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டி

இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1 - 1 என சமநிலை அடைந்துள்ளது. இந்நிலையில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இழந்த தோல்விக்கு பழிதீர்க்க இங்கிலாந்தும், முழு தொடரையும் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணியும் தயாராகி வருகிறது.

 பவுலிங்

பவுலிங்

2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 337 என்ற கடின இலக்கை நிர்ணயித்தபோதும், இங்கிலாந்து அணி சுலபமாக வெற்றி பெற்று அசத்தியது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை கட்டுபடுத்த இந்திய வீரர்கள் தவறிவிட்டனர். இதனால் இங்கிலாந்து 43.3 ஓவர்களில் இலக்கை அசால்டாக எட்டியது. எனவே 3வது ஒருநாள் போட்டியில் பவுலிங்கில் மாற்றம் தேவை என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

குழப்பம்

குழப்பம்

இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதை போலவே வசீம் ஜாஃபரும் கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியுள்ள முறையோ ரசிகர்களை பெரிதும் குழப்பியுள்ளது. ஏனென்றால் சம்பந்தமே இல்லாதது போன்ற புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்ன மாற்றம்

அப்புகைப்படத்தில் "Chess players can be seen in the late afternoon sun in Washington Square Park in Greenwich Village, Manhattan, NY". என குறிப்பிடப்பட்டுள்ளத். அதாவது, chess Player எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சஹாலை தான். அவர் கிரிக்கெட்டிற்கு வருவதற்கு முன்னர் செஸ் ப்ளேயராக இருந்தார். New york எனக்குறிப்பிடப்பட்டிருப்பது வாஷிங்டன் சுந்தர், மற்றும் Sun எனக்கூறியிருப்பது சூர்யகுமார் யாதவ் ஆகும். இவர்கள் மூவரை அணிக்குள் சேர்க்க வேண்டும் என்பதை அவர் சுற்றி வளைத்து தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Wasim Jaffer’s puzzling tweet to suggest changes for 3rd ODI against England
Story first published: Saturday, March 27, 2021, 19:13 [IST]
Other articles published on Mar 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X