For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4வது போட்டியில் பேர்ஸ்டாவ் தான் இலக்கு - முகமத் ஷமி

சௌதாம்ப்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளிக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை சௌதாம்ப்டனில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய வீரர் முகமது ஷமி இந்திய பந்துவீச்சை புகழ்ந்துள்ளார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியது,

We are focusing for Barstow - shami


"தற்போதைய இந்திய அணி சிறந்த வேகபந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. எதிரணியை விட நமது பந்துவீச்சு வலுவாக உள்ளது. ஒரு போட்டியில் ஐந்து வேக பந்துவீச்சாளர்களை களமிறக்குவது பலனளிக்காது. கண்டிப்பாக அணியில் ஒரு சூழல் பந்துவீச்சாளர் தேவை. ஏனென்றால் போட்டியின் கடைசி நாளில் கண்டிப்பாக பந்து சுழல கூடும்.

கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் ஒரு சிறப்பான முடிவு தெரியும். ஒரு பேட்ஸ்மேன் காயத்தால் அசௌகர்யமாக உணரும் போது பந்துவீச்சாளர்கள் அவரது குறையை நோக்கி தங்கள் கவனத்தை திருப்புவர். நான் மட்டுமல்ல அனைத்து பந்துவீச்சாளர்களும் இதனையே செய்வார்கள்.இந்த போட்டியில் நாங்களும் அதனை பயன்படுத்துவோம் என்றார் அவர்.

பேர்ஸ்டாவ் கடந்த போட்டியில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அவர் நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்க உடல் தகுதி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷமி இந்த தொடரில் இதுவரை 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.







Story first published: Wednesday, August 29, 2018, 11:28 [IST]
Other articles published on Aug 29, 2018
English summary
We are focusing for Barstow - mohammed shami during pre match press release
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X