For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குறைந்து கொண்டே செல்லும் வயது.. முகமது கைஃப் போட்ட ட்வீட்.. பாக். சமாளிப்பு!

Recommended Video

Naseem Shah cried after receiving his debut cap | ஜாம்பவான் கையால் அறிமுகமான நசீம் ஷா

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் புதிய நம்பிக்கைக்குரிய வரவாக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா பார்க்கப்படுகிறார். இந்நிலையில் அவரது வயது குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

நசீம் ஷா தன்னுடைய 16வது வயதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சர்வதேச போட்டிகளில் களமிறங்கி விளையாடி வரும் நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார்.

இந்நிலையில் நசீம் ஷாவின் வயது குறித்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப்பும் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சச்சின் கொடுத்த ஐடியா.. மூட்டை முடிச்சை கட்டி வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பிய கோலி!சச்சின் கொடுத்த ஐடியா.. மூட்டை முடிச்சை கட்டி வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பிய கோலி!

 முதல் போட்டியில் தோல்வியுற்ற பாகிஸ்தான்

முதல் போட்டியில் தோல்வியுற்ற பாகிஸ்தான்

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்க்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பேட்டிங் குறைபாடே இந்த போட்டியில் தோல்வியுற காரணமாக கூறப்படுகிறது.

 நம்பிக்கை நட்சத்திரம் நசீம் ஷா

நம்பிக்கை நட்சத்திரம் நசீம் ஷா

இந்த போட்டியில் விளையாடிய இளம் வீரர் நசீம் ஷா, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

 நசீம் ஷா அறிமுகம்

நசீம் ஷா அறிமுகம்

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு மிக இளம் வயதிலேயே டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமையான சாதனைக்கு உரியவராக நசீம் ஷா உள்ளார்.

 இந்திய முன்னாள் வீரர் சர்ச்சை டுவீட்

இந்திய முன்னாள் வீரர் சர்ச்சை டுவீட்

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கையிப், நசீம் ஷாவின் வயது குறித்த சர்ச்சையை தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார். பாகிஸ்தானின் பிரபல விளையாட்டு ஆசிரியர் சாஜ் சாதிக், தனது டுவிட்டரில் நசீம் ஷாவின் வயது 17 என்று குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டியுள்ள முகமது கையிப், தற்போது 16 வயதாகும் நசீம் ஷாவிற்கு வயது பின்னோக்கி செல்வதாக தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதில்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதில்

இந்நிலையில் முகமது கையிப்பின் இந்த சர்ச்சை பதிவிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ வசீம் கான் பதிலளித்துள்ளார். நசீம் ஷா வயது முதிர்ந்தவர் போல தோற்றமளிப்பதாலேயே இந்த சர்ச்சைகள் தோன்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவிற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை

இந்தியாவிற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை

மிக சிறிய வயதில் சர்வதேச விளையாட்டில் நசீம் பங்கேற்றுள்ளதும், அவர் வயது முதிர்ந்தவர் போல தோற்றமளிப்பதும் தான் அவரது வயது குறித்த சர்ச்சைக்கு காரணம் என்று தெரிவித்துள்ள வசீம் கான், நசீம் ஷாவின் முகத்தை பார்த்தால், அவரது குறைவான வயது தெரியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வசீம் கான் குறித்து இந்தியா என்ன நினைக்கிறது என்பது குறித்து எந்த அக்கறையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Story first published: Monday, November 25, 2019, 15:39 [IST]
Other articles published on Nov 25, 2019
English summary
Pakistan fast bowler Naseem Shah age controversy cleared by PCB
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X