For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தாவில் மிரட்டும் மழை.. ஆட்டம் ரத்தானால் அடுத்த சுற்றுக்கு செல்வது யார்..? பிசிசிஐ திணறல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் தொடர்ந்து கன மழை பெய்வது வருவதால் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Recommended Video

IPL 2022 Playoffs நடக்குமா? மிரட்டும் Kolkata Weather Report | #Cricket

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் முதல் 2 போட்டிகள் நாளையும், நாளை மறுநாளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

5 வீரர்களின் இடம் உறுதி.. 4 துறைகளை செதுக்கும் பிசிசிஐ.. தென்னாப்பிரிக்க தொடருக்கு கலக்கல் அணி ரெடி!5 வீரர்களின் இடம் உறுதி.. 4 துறைகளை செதுக்கும் பிசிசிஐ.. தென்னாப்பிரிக்க தொடருக்கு கலக்கல் அணி ரெடி!

இதற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இந்த நிலையில், கொல்கத்தாவில் கன மழை பெய்து வருகிறது.

வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை

இந்த வாரம் முழுவதும் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கலக்கத்தில் உள்ள பிசிசிஐ இதுவரை மாற்று ஏற்பாட்டை செய்யவில்லை. போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றவும் தற்போது நேரமில்லை.

ஆட்டம் தடை-என்ன நடக்கும்?

ஆட்டம் தடை-என்ன நடக்கும்?

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ தவித்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களும் மழை பெய்ய கூடாது என்று வேண்டுதலில் ஈடுபடுகின்றனர். நாளை நடைபெறும் முதல் குவாலிபையரில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒரு வேலை இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலையில் உள்ளதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

செம லக்

செம லக்

அதே போன்று புதன்கிழமையும் மழையின் குறுக்கீடு இருக்கலாம். அப்போதும் ஆட்டம் தடைப்பட்டால் எந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்படி பார்த்தால் குஜராத் அணிக்கும், லக்னோ அணிக்கும் தான் லக் உள்ளது.

ஆர்சிபி பாவம்

ஆர்சிபி பாவம்

முதல் குவாலிபையரில் தோற்றதுவிட்டது என்று ராஜஸ்தான் அணி அறிவிக்கப்பட்டாலும், அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு குவாலிபையர் 2வில் கிடைக்கும். ஆனால் ஆர்சிபியின் நிலைமை தான் மிகவும் பாவம். தோற்றால் நடையை கட்ட வேண்டியது தான். இதனால் மழை குறுக்கீடு இருக்க கூடாது என்று ஆர்சிபி ரசிகர்கள் வேண்டுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Story first published: Monday, May 23, 2022, 13:31 [IST]
Other articles published on May 23, 2022
English summary
Weather forecast- Rain threatening IPL Playoffs in Kolkatta கொல்கத்தாவில் மிரட்டும் மழை.. ஆட்டம் ரத்தானால் அடுத்த சுற்றுக்கு செல்வது யார்..? பிசிசிஐ திணறல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X