For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்க சொல்றீங்க.. ஆபத்திலும் தீபக் சஹார் வரமாட்டாரா??.. அப்படி என்னதான் ஆனது.. உண்மை இதோ!

ஹேமில்டன்: நியூசிலாந்தில் இந்திய அணி தவித்து வரும் சூழலில் கூட தீபக் சஹார் ஏன் இன்னும் சேர்க்கப்படாமலேயே இருக்கிறார் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் கலக்கிய இந்திய அணியால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சோபிக்க முடியவில்லை.

ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 306 ரன்களை குவித்த போதும், நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

 ஓ மை காட்.. இந்தியாவுக்கு எமனாக வந்த ஹேமில்டன்.. 2வது போட்டியில் ஜெயிப்பது கஷ்டம் தான்.. காரணம் என்ன ஓ மை காட்.. இந்தியாவுக்கு எமனாக வந்த ஹேமில்டன்.. 2வது போட்டியில் ஜெயிப்பது கஷ்டம் தான்.. காரணம் என்ன

3வது போட்டி

3வது போட்டி

இதனையடுத்து இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? கட்டமான 2வது ஒருநாள் போட்டி நாளை ஹேமில்டனில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்த போதும் பவுலிங் சொதப்பியது. வில்லியம்சன் - டாம் லாதமின் பார்ட்னர்ஷிப்பை கடைசி வரை பிரிக்கவே முடியவில்லை.

என்ன ஆனது?

என்ன ஆனது?

எனவே 2வது போட்டியிலாவது தீபக் சஹார் வருவாரா என்று கேட்டாலும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஏன் தான் தீபக் சஹார் ஒதுக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு தகவல் வெளியாகியுள்ளது. அணியில் சேர்க்கப்பட்டாலும் தீபக் சஹாருக்கு இன்னும் காயம் சரியாகவே இல்லை. காலில் இன்னும் காய பாதிப்பு இருப்பதால் 100% குணமடையவில்லை. அவரை அவசரப்படுத்தி காயத்தை பெரிதாக்கவில்லை என அணி நிர்வாக கூறியுள்ளது.

ரசிகர்களின் கோபம்

ரசிகர்களின் கோபம்

காயத்தில் இருக்கும் ஒரு வீரரை பின்னர் எதற்காக அணியில் சேர்த்துள்ளீர்கள், இக்கட்டான சூழல் வரும்போதும் ஒரு நல்ல பவுலரை பயன்படுத்த முடியவில்லையே? என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சீனியர் வீரரான புவனேஷ்வர் குமாரும் இந்த தொடரில் இல்லை என்பதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

காயம் எப்படி ஏற்பட்டது

காயம் எப்படி ஏற்பட்டது

இந்தாண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸுடன் நடந்த டி20 போட்டியின் போது தீபக் சஹாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்தே அவர் விலகினார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் மீண்டும் காயத்தின் தன்மை பெரிதாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 26, 2022, 17:17 [IST]
Other articles published on Nov 26, 2022
English summary
what happened to Deepak chahar? is he will play India vs New zealand 2nd ODI match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X