For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்டில் அசத்தும் ரிஷப் பண்ட் .. ஒருநாள் போட்டிகளில் சொதப்ப இதுதான் காரணம்.. என்ன மாற்றம் தேவை?

டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக உள்ள ரிஷப் பன்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியில் தோனியின் ஓய்வுக்கு பின், ரிஷப் பன்ட் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டார். சிறிய வயதிலேயே ஜாம்பவானின் இடத்தை நிரப்ப தொடக்கத்தில் கொஞ்சம் சிரமப்பட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக ரிஷப் பன்ட் ஆட்டம் முன்னேறி கொண்டே வந்தது.

தொடர்ந்து ரிஷப் பன்ட் ஸ்பெஷல் வீரர், அவரை கவனமாக கையாள வேண்டும் என்ற குரல்களும் எழுந்தது. அதற்கேற்ப தான் ஏன் ஸ்பெஷல் வீரர் என்று அனைவருக்கும் புரிய வைக்கும் வகையில், ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.. காரணத்தை கூறும் லட்சுமண்.. சாம்சனுக்கு வாய்ப்பு இல்லையாரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.. காரணத்தை கூறும் லட்சுமண்.. சாம்சனுக்கு வாய்ப்பு இல்லையா

ரிஷப் பன்ட் சாதனை

ரிஷப் பன்ட் சாதனை

அதன்பின்னர் தோனியின் இடத்திற்கு ரிஷப் பன்ட் தான் சரியான மாற்று வீரர் என்று ரசிகர்கள் பேச தொடங்கினர். ஒரே நாளில் ரிஷப் பன்ட்-ன் ரசிகர்கள் எண்ணிக்கை கோடியை தாண்டியது. ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மண்ணிலும் ரிஷப் பன்ட் சதம் விளாசி தனது திறமையை அனைவருக்கும் மீண்டும் நிரூபித்தார். அதுமட்டுமல்லாமல் ஆர்ச்சர் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

திட்டம் என்ன?

திட்டம் என்ன?

இதனால் ரிஷப் பன்ட்-ன் இடம் எந்த தொடரிலும் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட்-ற்கு பேட்டிங்கில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவருக்கான திட்டம் என்ன, ரோல் என்ன என்பதை இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தாமலேயே செயல்பட்டு வந்தது.

ஃபார்மில் இல்லாத பன்ட்

ஃபார்மில் இல்லாத பன்ட்

இதனால் கடந்த சில தொடர்களில் ரிஷப் பன்ட் பெரிய அளவில் சோபிக்க தவறி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் ரிஷப் பன்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் செயல்பட முடியாமல் திணறி வருகிறார். இதற்கு அவரது பேட்டிங் மட்டுமே முழுமையான காரணமாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஃபீல்டிங்கில் 30 வட்ட வளையத்திற்குள் அதிக வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்

இதனை பயன்படுத்தி ரிஷப் பன்ட் அதிரடியான ஷாட்களை விளையாடி வேகமாக ரன்களை குவிப்பார். அது ரிஷப் பன்ட் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதோடு, ரன்களையும் கட்டுப்படுத்த எதிரணி வீரர்கள் ஃபீல்டிங்கை விரிவு படுத்துவார்கள். இதனால் ரிஷப் பன்ட் அதிரடியை குறைத்து, சிங்கிள் ஓட வேண்டும் என்று நிலை உள்ளது. அதேபோல் சிக்சர், பவுண்டரி விளாசுவது அவ்வளவு எளிதல்ல.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

அதனால் வொயிட் பால் கிரிக்கெட்டில் ரிஷப் பன்ட் தொடர்ந்து திணறி வருகிறார். அவரை சரியாக பயன்படுத்தினால், இங்கிலாந்து அணிக்கு எதிராக இக்கட்டான நேரத்தில் சதம் விளாசி வெற்றியை தேடி தந்தது போல், இந்திய அணிக்கு ஏராளமான கோப்பைகளை பெற்றுக் கொடுப்பார். இதனால் அவருக்கான மாற்று வீரரை கொண்டு வராமல், தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து இந்திய அணி பயன்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Wednesday, November 30, 2022, 19:17 [IST]
Other articles published on Nov 30, 2022
English summary
Rishabh Pant is the best player in Test cricket. But continues to fail in ODI and T20 cricket. This Story tells about the Failure of Pant in white ball Cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X