For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'வாயை மூடு முட்டாள்': ரசிகரிடம் கொந்தளித்த ஹர்பஜன் சிங்- எதற்கு தெரியுமா?

By Siva

சென்னை: கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டுக்கு அரசியல் சாயம் பூசிய ரசிகரை முட்டாள் என திட்டியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் கணக்கில் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண் ஒருவரை நடுத்தெருவில் வைத்து போலீஸ்காரர் ஒருவர் தாக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவர் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவரை டேக் செய்துள்ளார்.

மோடி

சர் நரேந்திர மோடி இது போன்ற முட்டாள்தனத்தை சகித்துக் கொள்ளக் கூடாது. மக்களை பாதுகாக்க தான் போலீசார் உள்ளார்களே தவிர அவர்களை தாக்க இல்லை என்று பஜ்ஜி ட்விட்டரில் தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பஜ்ஜியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் பலர் அவரை விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் பஜ்ஜியின் ட்வீட்டுக்கு அரசியல் சாயம் பூசினர். இதை பார்த்த அவர் கோபம் அடைந்து ரசிகர்கள் சிலரை திட்டிவிட்டார்.

முதல்வர்

மாநில போலீசார் பிரதமரின் கட்டுப்பாட்டில் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில முதல்வரிடம் கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கு பஜ்ஜி கூறியிருப்பதாவது, பஞ்சாபோ, எந்த மாநிலமோ அனைத்தும் இந்தியாவில் தான் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று உங்கள் குடும்பத்திற்கு நடந்தால் தெரியும். முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

முட்டாள்

காவல் துறையில் இருந்து கொண்டு பொய்யை வைத்து அரசியல் செய்கிறீர்கள். சீருடையை விட்டுவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேருங்கள் என்று கூறிய ரசிகருக்கு பஜ்ஜி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, வாயை மூடு முட்டாள். முதலில் நான் போலீசா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நான் போலீசாக இருந்தால் முதலில் உங்களை தான் உள்ளே வைப்பேன் என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 13, 2016, 14:10 [IST]
Other articles published on Apr 13, 2016
English summary
Cricketer Harbhajan Singh got angry and called a fan idiot after his tweet was given political angle.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X