For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியா? தினேஷ் கார்த்திக்கா? யார் பெருசுன்னு அடிச்சு காட்டு.. வைரலான விவாதம்!

நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இருக்கிறார்.

By Shyamsundar

Recommended Video

இந்தியாவின் சிறந்த பினிஷர் யார்?- வீடியோ

சென்னை: நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இருக்கிறார். இதனால் தற்போது புதிய விவாதம் ஒன்று உருவாகி இருக்கிறது.

அதன்படி எல்லோரும் டோணி சிறந்த பினிஷரா, தினேஷ் கார்த்திக் சிறந்த பினிஷரா என்று கேட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் தினேஷ் கார்த்திக்குக்கு டோணி வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

பெரிய கிரிக்கெட் விமர்சகர்கள் கூட இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்கள். இதற்கு தினேஷ் கார்த்திக்கே பதில் அளித்துள்ளார்.

பினிஷிங்

பினிஷிங்

தினேஷ் கார்த்திக்குக்கு முன்பே பினிஷிங் மன்னனாக வலம் வருவது டோணிதான். ஒருநாள் போட்டி மட்டுமில்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் இவர்தான் பினிஷிங் கிங். ஐபிஎல் போட்டியில் கடந்த வருடங்களில் கடைசி ஓவரில் டோணி ஆடியதை யாராலும் மறக்க முடியாது. 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் டோணி ஆடிய ருத்ர தாண்டவம் யாரால் மறக்க முடியும்.

யார் பெரியவர்

ஆனாலும் டோணி பெரியவரா, தினேஷ் கார்த்திக் பெரியவரா என்று பலரும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சிலர் தினேஷ் கார்த்திக்தான் சிறந்த கீப்பர், பினிஷர் என்றுள்ளார். இவர், ''தினேஷ் கார்த்திக் இப்போது ஆடியது போல டோணி எப்போதுமே ஆடியது இல்லை'' என்று தினேஷுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

டோணிக்கு அடுத்து

இவர் ''டோணிக்கு அடுத்துதான் தினேஷ் கார்த்திக் சிறந்த பினிஷர். இப்போது அவர் கொல்கத்தா அணியின் கேப்டனாகிவிட்டார்'' என்று டோணிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தினேஷ் என்ன சொல்கிறார்

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில் ''கடைசி நேரத்தில் அமைதியாக இருக்க டோணியிடம் கற்றுக்கொண்டேன். போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்பதை டோணி, கோஹ்லி, ரெய்னா ஆகியோரிடம் கற்றுக் கொண்டேன். அவர்கள்தான் எனக்கு ரோல்மாடல்'' என்றுள்ளார்.

அவரே

அவரே

தற்போது டோணிக்கு 37 வயது ஆகிறது. தினேஷ் கார்த்திக்குக்கு 32 வயதுதான் ஆகிறது. இதனால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் கீப்பராக கூடிய சீக்கிரத்தில் வலம் வருவார் என்று கூறப்படுகிறது. அவரே டோணிதான் எனக்கு ரோல்மாடல் என்று கூறி பிரச்சனையை முடித்து வைத்துள்ளார்.

Story first published: Monday, March 19, 2018, 13:35 [IST]
Other articles published on Mar 19, 2018
English summary
Ind won the final match against Bangladesh in Sri Lanka. India lifts Nidahas Trophy. Mind-blowing last two overs the match between Ind and Bangladesh has changed the result. Dinesh Karthik becomes viral on social media after India vs Bangladesh match. Internet becomes viral after discussion goes on comparison between Dhoni adn Ashwin.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X