For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-7: கட்டாயத்தில் உள்ள ஹைதராபாத்தும், கடுப்பிலுள்ள பஞ்சாப்பும் இன்று மோதல்

By Veera Kumar

ஹைதராபாத்: வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், கடந்த பந்தையத்து தோல்விக்கு பழிதீர்க்க கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணிகளும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்குவதால் மேட்சில் அனல் பறக்கப்போகிறது.

தோல்வி காணாத பஞ்சாப்

தோல்வி காணாத பஞ்சாப்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த முதல் ஐந்து போட்டிகளையும் வென்று கம்பீரமாக நடைபோட்டபடி தாயகம் திரும்பியது பஞ்சாப் அணி. மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் போன்றோர் இந்த தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

மும்பையிடம் வீழ்ச்சி

மும்பையிடம் வீழ்ச்சி

தாயகம் திரும்பிய பிறகு பஞ்சாப் சந்தித்த முதல் போட்டியில் மும்பை இன்தியன்ஸ்சை எதிர்கொண்டது. அதுவரை நடந்த 5 போட்டிகளிலும் வெற்றியே பெற்றிருக்காத மும்பை எதிர்பாராத விதமாக பஞ்சாப்பை வீழ்த்தி பழி தீர்த்தது. இதுதான் பஞ்சாப் அணியின் முதல் தோல்வி.

டோணிக்கே அல்வா

டோணிக்கே அல்வா

ஆனால் பஞ்சாப் அணி வீழ்ந்துவிடவில்லை. அடுத்தடுத்த பந்தையங்களில் வெற்றிக்கொடி நாட்டியது. அதிலும் ஆனானப்பட்ட, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி அனைவரின் புருவங்களையும் உயர்த்த செய்தது. இந்த தொடரில் இதுவரை நடந்த பந்தையங்களில் பஞ்சாப்பை, சென்னை வீழ்த்தவேயில்லை.

ஷாக் கொடுத்த கம்பீர்

ஷாக் கொடுத்த கம்பீர்

சென்னையையே வீழ்த்தியாகிவிட்டது, இனிமேல் நம்மை வெல்ல யாரிருக்கிறார்கள் என்ற மமதையில் ஆடிவந்த பஞ்சாப்புக்கு கடந்த பந்தையத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூடு வைத்துள்ளது. அதிலும் 'முட்டை' மன்னன் கம்பீரின் திடீர் விஸ்வரூபத்தை எதிர்பார்க்காத பஞ்சாப் நொந்துதான் போய்விட்டது.

கட்டாயத்தில் ஹைதராபாத்

கட்டாயத்தில் ஹைதராபாத்

கடந்த பந்தையத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி, இன்று நடைபெறும் பஞ்சாப்புடனான போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்திலுள்ளது. இதில் தோல்வியடைந்தால் 6 மேட்சுகளில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்புக்கு ரன்ரேட்டை நம்ப வேண்டிய நிலை ஏற்படலாம்.

பதிலடிக்கு பஞ்சாப் ரெடி

பதிலடிக்கு பஞ்சாப் ரெடி

கடந்த மேட்சில் கொல்கத்தாவிடம் தோற்ற தோல்வியால் கடுப்பிலுள்ள பஞ்சாப் வீரர்கள் பழிதீர்க்க வரிந்துகட்டிக்கொண்டுள்ளார்கள். அவர்களிடம் இன்று சிக்கப்போவது ஹைதராபாத் அணிதான். எனவே தங்கள் முழு வேகத்தையும் ஹைதராபாத்திடம் காட்டுவார்கள், அதற்கு ஸ்டெயின் தலைமையிலான பந்து வீச்சு கோஷ்டி தயாராக உள்ளது.

இங்க பேட்டிங், அங்க பவுலிங்

இங்க பேட்டிங், அங்க பவுலிங்

பஞ்சாப் அணியின் பலம் பேட்டிங் என்றால், ஹைதராபாத்தின் பலம் அதன் பவுலிங்கில் உள்ளது. ஐபிஎல் நடப்பு சீசனில் அதிக ரன் எடுத்த மேக்ஸ்வெல் பஞ்சாப் பக்கம் என்றால், அதிகப்படியான விக்கெட்டை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் ஹைதராபாத் பக்கம். ஆகமொத்தம், இன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத்தில் தொடங்க உள்ள இரு அணிகளுக்கும் நடுவேயான பந்தையத்தில் அனல் பறக்கும்.

Story first published: Wednesday, May 14, 2014, 14:10 [IST]
Other articles published on May 14, 2014
English summary
After being outplayed by Mumbai Indians in their previous match, Sunrisers Hyderabad face another tough battle when they take on table-toppers Kings XI Punjab at the Rajiv Gandhi International cricket stadium in an IPL match here today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X