For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றி, தோல்வி பணத்தை பத்தி மட்டுமே நெனைச்சு விளையாடினா அது பிசினசா மாறிடும்... ராகுல் டிராவிட்

டெல்லி : விளையாட்டு வீரர்கள் வெற்றி, தோல்வி மற்றும் பணத்தை பற்றி மட்டுமே நினைத்து விளையாடினால் அது பிசினசாக மாறிவிடும் என்று முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்கள் முதலில் தங்களது விளையாட்டு, விளையாட்டு விதிகள், எதிரணியினர் மற்றும் தான் விளையாடும் விளையாட்டில் இணைந்துள்ள அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றியை அடைவதற்கு விளையாட்டு வீரர்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் டிராவிட் கூறியுள்ளார்.

இளம் வீரர்களுக்கு அட்வைஸ்

இளம் வீரர்களுக்கு அட்வைஸ்

இளம் விளையாட்டு வீரர்கள் வெற்றி தோல்வி மற்றும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாட்டை அணுக கூடாது என்றும் அவ்வாறு விளையாடினால் அது பிசினசாக மாறிவிடும் என்றும் முன்னாள் வீரரும் தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

24,000 ரன்கள் குவிப்பு

24,000 ரன்கள் குவிப்பு

தன்னுடைய 17 ஆண்டு கிரிக்கெட் கேரியரில் பொறுமையான தனது குணத்தால் மற்றவர்களை கவர்ந்தவர். மைதானத்தில் மட்டுமின்றி பொதுவெளிகளிலும் மிகவும் மரியாதைக்குரியவராக போற்றப்பட்டவர். சர்வதேச போட்டிகளில் 24,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அவர், எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காதவர்

மதிப்பீட்டை தருவதில்லை

மதிப்பீட்டை தருவதில்லை

இந்நிலையில் வெற்றி மற்றும் தோல்விகள் மட்டுமே ஒரு வீரர் குறித்த மதிப்பீட்டை தருவதில்லை என்று அவர் கூறியுள்ளார். இளம் வீரர்களுக்கு விளையாட்டை அணுகும் வழிமுறைகள் குறித்து பேசிய அவர், வெற்றி, தோல்வி மற்றும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாட்டை அணுக கூடாது என்றும் அவ்வாறு அணுகினால் அது பிசினசாக ஆகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

ஆக்ரோஷமாக செயல்பட வேண்டியதில்லை

ஆக்ரோஷமாக செயல்பட வேண்டியதில்லை

மாறாக, தன்னுடைய விளையாட்டு, அதன் விதிமுறைகள், எதிரணி மற்றும் ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டை சார்ந்த அனைவருக்கும் இளம் வீரர்கள் மரியாதை தர வேண்டும் என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டுள்ளார். வெற்றியை பெறுவதற்கு ஆக்ரோஷமாக செயல்பட வேண்டிய கட்டடாயம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, December 4, 2020, 17:29 [IST]
Other articles published on Dec 4, 2020
English summary
You don’t have to be mean and nasty to be really successful -Rahul Dravid
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X