For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க மட்டும் போனாப் போதும்... "அவங்கெல்லாம்" வேண்டாம்.. இந்திய வீரர்களைக் கடுப்படித்த பிசிசிஐ

மும்பை: இலங்கை பயணத்தின்போது வீரர்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும் அவர்களுடன் மனைவியரோ அல்லது காதலியரோ செல்லக் கூடாது என்றும் இந்திய வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் மீண்டும் தடை போட்டுள்ளது.

இந்த வாரத்தில் இந்திய அணிக்கும், இலங்கைக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் வீரர்களுடன் மனைவி அல்லது காதலிகள் செல்ல தடை விதித்துள்ளதாம் பிசிசிஐ. இதனால் வீரர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

அதான் நல்லா ரெஸ்ட் எடுத்தாச்சே

அதான் நல்லா ரெஸ்ட் எடுத்தாச்சே

இதற்கு கிரிக்கெட் வாரியம் கூறும் காரணம், பல வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத கால அளவுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது. போதுமான அளவுக்கு தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டுள்ளனர். எனவேதான் காதலியர் அல்லது மனைவியரை அழைத்துச் செல்லத் தேவையில்லை என்ற முடிவை வாரியம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வங்கதேச டூருக்குப் பின்னர்

வங்கதேச டூருக்குப் பின்னர்

அணியின் பெரும்பாலான டெஸ்ட் வீரர்கள் வங்கதேச டூர் முடிந்ததிலிருந்து ஓய்வில்தான் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோச் இல்லாமல்

கோச் இல்லாமல்

இலங்கை செல்லும் இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் இல்லாமலேயே செல்கிறது. டங்கன் பிளட்சர் ஓய்வுக்குப் பின்னர் புதிய கோச்சை நியமிக்காமல் இழுத்தடித்து வருகிறது இந்திய அணி நிர்வாகம். ரவி சாஸ்திரியை வைத்து காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 6 முதல்

ஆகஸ்ட் 6 முதல்

ஆகஸ்ட் 6 முதல் இந்திய அணியின் தொடர் தொடங்குகிறது. ரவி சாஸ்திரி தொடர் முழுவதும் உடன் இருப்பார். தற்போது இங்கிலாந்தில் இருக்கும் அவர் 12ம் தேதி அணியுடன் இணைந்து கொள்வார். அன்றுதான் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

3 டெஸ்ட் போட்டிகள்

3 டெஸ்ட் போட்டிகள்

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இலங்கையுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 2, 2015, 16:45 [IST]
Other articles published on Aug 2, 2015
English summary
BCCI has decided to bar wives and girl friends of players during the Indian Team's Sri Lankan tour.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X