For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பௌலர்களோட வொர்க்லோட் சரியா கண்காணிக்கப்படுது... அதுதான் அவங்களோட வெற்றிக்கு காரணம்

சென்னை : தற்போதைய சூழலில் இந்திய பௌலர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சின்மூலம் சர்வதேச அளவில் பேட்ஸ்மேன்களுக்கு மிகசரியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு போட்டிகளில் மட்டுமின்றி வெளிநாடுகளில் பங்கேற்கும் தொடர்களிலும் அவர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வொர்க்லோட் மேனேஜ்மெண்ட் மூலமாக பௌலர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களது திறமைகள் சரியாக பயன்படுத்தப்படுவதால் தான் சர்வதேச அளவில் பௌலர்கள் சிறப்பாக செயல்படுவதாக இந்திய அணியின் பௌலிங் கோச் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.

தோனி, சிஎஸ்கே-வுக்கு செருப்பு தைப்பவரின் கஷ்டம்.. ஓடி வந்து உதவிய இர்பான் பதான்.. நெகிழ்ச்சி சம்பவம்தோனி, சிஎஸ்கே-வுக்கு செருப்பு தைப்பவரின் கஷ்டம்.. ஓடி வந்து உதவிய இர்பான் பதான்.. நெகிழ்ச்சி சம்பவம்

கண்காணிக்கப்படும் வொர்க்லோட்

கண்காணிக்கப்படும் வொர்க்லோட்

சர்வதேச அளவில் சமீப காலங்களில் இந்திய பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மற்ற அணி வீரர்களுக்கு அவர்கள் தங்களது பந்துவீச்சின் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பௌலர்களின் வொர்க்லோட் சிறப்பான அளவில் கண்காணிக்கப்பட்டு அவர்களின் திறமை சரியான அளவில் பயன்படுத்தப்படுவதால்தான் அவர்கள் சிறப்பாக செயல்படுவதாக அணியின் பௌலிங் கோச் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.

பணிச்சுமை, நெருக்கடியிலும் சிறப்பு

பணிச்சுமை, நெருக்கடியிலும் சிறப்பு

மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திலும் அவர்கள் தங்களது பந்துவீச்சினை மேற்கொள்கின்றனர். தங்களுக்கு இருக்கும் பணிச்சுமை மற்றும் நெருக்கடிகளுக்கு இடையிலும் அவர்கள் இதை சிறப்பாக செய்து வருகின்றனர். இதனால் கேப்டன் விராட் கோலி கடந்த 2015 முதல் டெஸ்ட் அணியில் 5 பௌலர்களை சராசரியாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது.

ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிப்பு

ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிப்பு

இதனிடையே, ஒரு பௌலர் எவ்வளவு ஓவர்களை சிறப்பாக போட முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கண்காணிக்கப்படுவதாகம், இதில் துல்லியமான கணிப்பை கண்டறிய, ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தப்படுவதாகவும் இந்திய பௌலிங் கோச் பாரத் அருண் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பௌலர்களின் திறமை குறித்த மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வொர்க்லோட் கண்காணிப்பு

வொர்க்லோட் கண்காணிப்பு

ஒரு பௌலர் பயிற்சியின்போது 20 கிலோ மீட்டர் தூரம் ஓடினார் என்றால், இதைக் கொண்டு, ஜிபிஎஸ் மூலம் அவர்குறித்த பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் பாரத் அருண் கூறினார். இதன்மூலம் அவரது வொர்க்லோட் கண்காணிக்கப்படுவதாகவும் இந்த காரணங்களால் தான் பௌலர்கள் சர்வதேச அளவில் சமீப காலங்களில் மிளிர்வதாகவும் பாரத் அருண் மேலும் தெரிவித்தார்.

Story first published: Wednesday, June 17, 2020, 19:01 [IST]
Other articles published on Jun 17, 2020
English summary
We use the GPS tracker to monitor all Bowling movements on the field -Bharat Arun
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X